டெல்லியில் போலீஸ் அனுமதியின்றி வீடு வாடகைக்கு விட்ட 23 உரிமையாளர்கள் கைது
டெல்லி:
டெல்லியில் போலீசார் அனுமதி இல்லாமல் வீடுகளை வாடகைக்கு விட்ட 23 வீட்டு உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த வீட்டின் உரிமையாளர் சுபாஷ் மல்ஹோத்ரா மற்றும் வீட்டு புரோக்கர் வீரேந்திர பால்இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பவர்களைப் பற்றி போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஒருசட்டம் உள்ளது. ஆனால் வீட்டில் தங்கியிருந்த தீவிரவாதிகளையே பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கதவறியதால், இவர்கள் இருவரையும் பிரிவு 188ன் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இவ்வீட்டில் தங்கியிருந்த ஜெய்ஸ்-ஏ-முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முகமது அப்சால் என்ற ஆப்பிள்வியாபாரியும் கைது செய்யப்பட்டான்.
இதையடுத்து, இதுபோல் வாடகைக்கு இருப்பவர்களைப் பற்றி டெல்லி போலீசாரிடம் அறிவிக்காமல் இருக்கும்வீட்டு உரிமையாளர்களைத் தேடும் வேட்டை அங்கு நடந்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இதுபோன்ற 23 வீட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லிபோலீசார் தெரிவித்தனர்.
ரஜெளரி கார்டன் பகுதியில் 9 பேரும், உத்தம் நகரில் 6 பேரும், பாஸிம் விஹாரில் 3 பேரும், கீர்த்தி நகரில் 3பேரும், ஹரி நகரில் 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேட்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால், கைது எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
மும்பை அல்-கொய்தா தீவிரவாதியின் வீடு இடிப்பு:
இதற்கிடையே மும்பையில் கைதாகி, வாக்குமூலம் அளித்துள்ள அல்-கொய்தா தீவிரவாதியான முகமது அப்ரோஸ்என்பவனின் வீட்டை மும்பை மாநகராட்சியினர் இடித்துத் தள்ளினர்.
டிராம்பே பகுதியில் அவன் சட்டவிரோதமாக அந்த வீட்டைக் கட்டியிருந்ததால், அந்த வீடு இடிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே அந்த வீட்டை இடித்துத் தள்ள மாநராட்சி முயற்சித்தது. ஆனால் சில அரசியல்தலையீடுகள் காரணமாக, அப்போது இடிக்க முடியவில்லை.
ஆனால் போலீசாரிடம் இப்போது அப்ரோஸ் வகையாக மாட்டிக் கொண்டு விட்டதால், அதுவும் அவன்அல்-கொய்தா என்ற சர்வதேச தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்ததால் அவ்வீட்டைஇடிப்பதில் மாநகராட்சிக்கு எந்தவிதமான சிரமமும் இருக்கவில்லை.
இதையடுத்து இவ்வீட்டைச் சுற்றியுள்ள தெருக்களில் பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. வீடுஇடிக்கப்படுவதைப் பார்ப்பதற்கு பொதுமக்களுடன் பத்திரிக்கை நிருபர்களும் ஏராளமான அளவில் கூடியிருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications