தீவிரவாத முகாம்களை தாக்க வேண்டும்: சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எல்லைக் கோட்டுக்கு அருகே இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களைத் தாக்கி அழிக்க வேண்டும் என்றுஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அந்தத் தீவிரவாத முகாம்களை இந்தியாகட்டாயம் தாக்கி அழிக்க வேண்டும் என்றும் சுவாமி கூறியுள்ளார்.
இப்போதைக்கு இதைத் தவிர வேறு வழியே இல்லை என்றும் கூறிய சுவாமி, தீவிரவாத செயல்களை பாகிஸ்தான்குறைத்துக் கொள்ளுமா இல்லையா என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது.
மேலும் இந்தியாவின் ஒரு பகுதிதான் காஷ்மீர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே காஷ்மீரைஆக்கிரமிக்க முயற்சிக்கும் தீவிரவாதிகளைக் களையும் உரிமையும் நமக்கு உண்டு என்றும் சுவாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications