தமிழகத்தில் 2 சதவிகித கர்ப்பிணிகளுக்கு எய்ட்ஸ்
சென்னை:
தமிழகத்தில் சோதனை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்களில் 2 சதவீதம் பேருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாககலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கூறிவுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான கே.ஏ.வான்ராம்போஎன்பவர் 12 ஆண்டுகளாக குரங்குகளை வைத்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளார்.
இவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் இந்தியாவிற்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு சம்பந்தமாக 1997ம் ஆண்டு முதல் நான்கு முறை வந்துள்ளேன். நான்சேகரித்த விவரப்படி இந்தியாவில் 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்களை சோதித்ததில், அவர்களில் இரண்டு சதவிகிதம் பேருக்கு எய்ட்ஸ் நோய்பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ஆண்கள், பெண்கள்மொத்தம் 16 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உகாண்டா நாட்டில் அதிகரித்து வந்த எய்ட்ஸ் நோய் அந்த நாட்டின் தீவிர முயற்சியால் விழிப்புணர்வு மூலம்குறைந்துள்ளது.
அதனால் தமிழகத்திலும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், செந்துறை ஒன்றியங்களில் முதல் கட்டமாக எய்ட்ஸ்விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உறவினர்களால் அனாதையாக்கப்பட்டு ஆதரவற்றுள்ள ஏழைகளுக்கு ரீடுதொண்டு நிறுவனம் மூலம் காப்பகம் ஒன்று அமைக்க முயற்சித்து கொண்டு இருக்கிறோம் என்று அவர்நிருபர்களிடம் கூறினார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications