லக்ஷர்-ஏ-தொய்பாவுக்கு அமெரிக்கா தடை: சொத்துக்களை முடக்க புஷ் உத்தரவு
வாஷிங்டன்:
நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பை தடை செய்யவும் அதன்சொத்துக்களை முடக்க அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கும் இந்தத் தீவிரவாத அமைப்புக்கும் எந்தத் தொடர்பும்இல்லை என்று கூறி தனது புத்தியையும் அமெரிக்கா காட்டியுள்ளது.
நேற்று புஷ் நிருபர்களிடம் கூறுகையில்,
லக்ஷர்-ஏ-தொய்பா காஷ்மீரில் (பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு) இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகசெயல்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவுகளை இந்த அமைப்பு சீர்குலைத்து வருகிறது.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நாடாளுமன்றம் தாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பேச்சுசுதந்திரத்தையும், மத சுதந்திரத்தையும் வழங்கியுள்ள மிகச் சுதந்திரமான அந்த நாட்டின் மீது நடந்துள்ள தாக்குதல்கடுமையாக கண்டிக்கத்தக்கது.
8 அப்பாவி இந்தியர்களும் அதில் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் சட்டசபையைத் தாக்கிய தீவிரவாதிகள்இப்போது நாடாளுமன்றத்தையும் தாக்கியுள்ளதன் மூலம் இந்தியாவின் சுதந்திரத்தையேகேள்விக்குறியாக்கியுள்ளனர்.
இந்தத் தீவிரவாதிகளை இந்தியப் படைகள் தடுத்திருக்காவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றஉறுப்பினர்களை கொன்று குவித்திருப்பார்கள். இந்தியாவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கு எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த அமைப்பை எந்த நாடும் ஆதரிக்கவில்லை. (பாகிஸ்தான் ஆதரிக்கவில்லை என்கிறார் புஷ்). பாகிஸ்தான்அதிபர் பர்வேஸ் முஷாரபின் முக்கியத்துவத்தைக் கெடுக்கவும் இந்த அமைப்பு முயல்கிறது. இந்தியா, பாகிஸ்தான்இரு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு லக்ஷர்-ஏ-தொய்பாவை ஒழிக்க அமெரிக்கா முயலும்.
உலகின் எந்தப் பகுதியில் தீவிரவாதம் தலையெடுத்தாலும் அமெரிக்கா அதை எதிர்த்துத் தாக்கும் என்றார் புஷ்.
பாகிஸ்தானின் இன்னொரு அமைப்புக்கும் தடை:
பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட யு.டி.என். என்ற அமைப்புக்கும் அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
இது குறித்து புஷ் கூறுகையில்,
சேவை அமைப்பு என்ற பெயரில் இந்த அமைப்பு அணு ஆயுதங்கள் குறித்த தகவல்களைத் திரட்டி பின்லேடனுக்குகொடுத்து வந்துள்ளது. இந்த அமைப்பையும், அதன் 3 இயக்குனர்களையும் தடை செய்து உத்தரவிடுகிறேன்.இவர்களின் அமெரிக்க சொத்துக்கள் முடக்கப்படும்.
இவர்களை ஆதரிக்கும் யாருடனும் அமெரிக்கா உறவு வைத்துக் கொள்ளாது என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications