ஜெ. மீதான நிலக்கரி ஊழல் வழக்கு: 27ம் தேதி தீர்ப்பு
சென்னை:
ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட நிலக்கரி ஊழல் வழக்கில் 27ம் தேதி தீர்ப்பு கூறப்படும் என்று இரண்டாவதுதனி நீதிமன்ற நீதிபதி தார்வேஷ் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீது கடந்த ஆட்சியில் பல வழக்குகள் போடப்பட்டன. கொடைக்கானல் ஹோட்டல் வழக்கு மற்றும்டான்சி வழக்கில், அவருக்கு தனி நீதிமன்றம் தண்டனை வழங்கியதால் அவரால் கடந்த சட்டசபைத் தேர்தலில்போட்டியிட முடியவில்லை.
பின்னர் அவருடைய மேல் முறையீட்டு மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவ்விரு வழக்குகளிலும்ஜெயலலிதா நிரபராதி என்று தீர்ப்பு கூறி சமீபத்தில் விடுதலை செய்துவிட்டது.
இதனால் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே வெளிநாட்டிலிருந்து தரம் குறைவான நிலக்கரியை அதிக விலைக்கு வாங்கியதில் தமிழக அரசுக்குஇழப்பு ஏற்பட்டதாக முன்னரே ஒரு வழக்கு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டதையடுத்து, வழக்கின் மீதான தீர்ப்பு வரும் 27ம் தேதி காலை 10.30மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி தார்வேஷ் கூறியுள்ளார்.
இந்தத் தீர்ப்பும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்தால்தான் அவரால் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும்முதல்வராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications