கண்ணகி சிலையை வேறு இடத்தில் நிறுவ உயர் நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை:
கடற்கரையிலிருந்து அகற்றப்பட்ட கண்ணகி சிலையை தொடர்பான வழக்குகள் முடியும் வரை அதை வேறு எங்கும்நிறுவக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கண்ணகி சிலையை அகற்றிய தமிழக அரசு, அந்தச் சிலை சேதமடைந்துவிட்டதாலும், போக்குவரத்துக்கு அது மிகவும் இடையூறாக இருப்பதால்தான் அதை அகற்றிவிட்டு தார் ரோடுபோட்டதாகவும் விளக்கமளித்துள்ளது.
இதை எதிர்த்து வழக்கறிஞர் காந்தி உட்பட 3 மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி சிவசுப்பிரமணயம்ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:
இந்த வழக்கு முடியும் வரை கண்ணகி சிலையை தமிழக அரசு வேறு இடத்தில் வைக்க இடைக்கால தடைவிதிக்கப்படுகிறது.
தமிழக அரசு அமைத்த ஐவர் குழு ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கவும் தடை விதிக்கப்படுகிறது.
மேலும் கண்ணகி சிலையை அகற்றியதற்கு, தமிழக தலைமை செயலாளர் மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர்விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.
மேலும் இந்த வழக்கை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications