கிரிக்கெட்: மழையால் ஆட்டம் பாதிப்பு
பெங்களூர்:
பெங்களூரில் இன்று (வெள்ளிக்கிழமை) பெய்த மழையால் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலானமூன்றாவது நாள் ஆட்டம் துவக்கத்திலும் இறுதியிலும் மழையால் பாதிக்கப்பட்டது.
மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் துவங்கினாலும், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் பந்துகளைச் சிதறடித்தார்.
ஆனால் அவருக்குத் துணையாக நிற்க வேண்டிய ராகுல் டிராவிட், 61 பந்துகளில் வெறும் 3 ரன்களை மட்டுமேஎடுத்து அவுட் ஆனார். தொடர்ந்து வந்த கேப்டன் சவுரவ் கங்குலியும் "முட்டை" ரன்களை எடுத்து பெவிலியன்திரும்பினார்.
நொந்து போயிருந்த டெண்டுல்கருக்கு வீரேந்திர சேவாக் தோள் கொடுத்தார். இதையடுத்து ஆட்டம் சூடுபிடித்தது.டெண்டுல்கரும் சதத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்.
ஆனால் அவர் 90 ரன்கள் (13 பவுண்டரிகள்) எடுத்திருந்தபோது, அவசரமாக இறங்கி ஆட முயற்சித்து ஸ்டெம்ப்அவுட் ஆகிவிட்டார்.
அடுத்து அனில் கும்ப்ளேயுடன் ஜோடி சேர்ந்து ஓரளவு நன்றாக ஆடி, அரை சதத்தைக் கடந்த சேவாக்கும் 66ரன்கள் (13 பவுண்டரிகள்) எடுத்த நிலையில், ஹோக்கர்டின் பந்தை விக்கெட் கீப்பர் போஸ்டரிடம் கேட்ச்கொடுத்துவிட்டு வெளியேறினார்.
பின்னர் தேநீர் இடைவேளையின்போது, மீண்டும் மழை வந்ததால் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.ஆட்டநேர இறுதியில் கும்ப்ளே 10 ரன்களும் ஹர்பஜன் சிங் ரன் எதுவும் எடுக்காமலும் ஆடிக் கொண்டிருந்தனர்.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து - 336/10 (123.3 ஓவர்கள்)
இந்தியா - 218/7 (86 ஓவர்கள்)
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications