பழநி பிள்ளையார் சிலைகளுக்கு செருப்பு மாலை: 8 பேர் கைது
பழநி:
செருப்பு தொழிலாளியிடமிருந்து செருப்புக்களை திருடி பழநியில் உள்ள பிள்ளையார் சிலைகளுக்கு செருப்புமாலை அணிவித்த எட்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பழநியில் உள்ள கோயில்களில் நான்கு பிள்ளையார் சிலைகளுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை செருப்புமாலை போடப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் பழநியைச் சேர்ந்த பீர் முகமது, பஷார்அகமது, மீரான், தலித் சிவா, அய்யாவு, பாலமுருகன், சேதுபதி மற்றும் மணிமுத்து ஆகிய எட்டு பேரை போலீசார்கைது செய்தனர்.
போலீசாரிடம் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் கூறியதாவது:
விடுதலை ஞாயிறுமலர் என்ற பத்திரிக்கையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சுற்றறிக்கை என்ற தலைப்பில்வெளியான பிரசுரத்தில், முஸ்லிம், தலித் இன மக்களுக்கு எதிராக சில கருத்துக்கள் இருந்தன.
இதனால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு எதிராக ஈடுபடுவது என்று திட்டமிட்டோம். அதன்படி பிள்ளையார் சிலைகளுக்குசெருப்பு மாலை போடுவது என்று முடிவு செய்தோம்.
பொன்னான் என்ற சாலையோர செருப்பு தொழிலாளி வைத்திருந்த செருப்புகளை திருடி, அவற்றை மாலையாகக்கோர்த்து, நான்கு குழுக்களாக பிரிந்து பிள்ளையார் சிலைகளுக்கு அவற்றை மாலைகளாகப் போட்டோம் என்றுஅவர்கள் கூறினர்.
இவ்வழக்கு தொடர்பான மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications