பாகிஸ்தானில் உள்ள தூதரை திரும்ப அழைத்தது இந்தியா
டெல்லி :
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் விஜய் நம்பியாரை மத்திய அரசு திரும்பஅழைத்துள்ளது.
தீவிரவாதிகள் தாக்கியவுடன் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர் அஸ்ரப் ஜஹாங்கீரை அழைத்து மத்திய அரசுமிகக் கடுமையாக கண்டித்தது. இந்தியாவின் கண்டனத்தை அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இன்று (வெள்ளிக்கிழமை) மாலைவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தியத் தூதரை திரும்ப அழைப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதாரங்களைக் கொடுத்த பிறகும் அந்நாடுஎந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்பதால் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் போன்ற தீவிரவாத அமைப்புகள்தான்நாடாளுமன்றத்தைத் தாக்கியுள்ளனர் என்பது குறித்த ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் கொடுக்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையே எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் குவிக்கப்பட்டதையடுத்து, இந்திய ராணுவமும்படைகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் எல்லைப் பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.
இந்தியா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று கருதப்படுகிறது.
தனது தூதரை இந்தியா திரும்ப அழைத்துள்ளதால், பாகிஸ்தானும் தனது தூதரை திரும்ப அழைக்கும் எனத்தெரிகிறது.
இந் நிலையில் லக்ஷர்-ஏ-தொய்பாவை அமெரிக்கா தடை செய்தது தவறு என பாகிஸ்தான் அமைச்சர்கள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications