பகுத்தறிவு பற்றி பேச கருணாநிதிக்கு அருகதை இல்லை: தம்பிதுரை
சென்னை:
பகுத்தறிவு பற்றி பேசுவதற்க கருணாநிதிக்கு அருகதை இல்லை என்று தமிழக கல்வி அமைச்சர் தம்பிதுரைகூறியுள்ளார்.
கண்ணகி சிலை அகற்றப்பட்டது குறித்து கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை கண்டித்து தம்பிதுரைகூறியிருப்பதாவது:
திராவிட தலைவர்கள் எல்லாம் தங்கள் பெயரை தூய தமிழில் மாற்றிக் கொண்ட போதும், தன்னுடைய பெயரைகருணாநிதி மாற்றிக் கொண்டாரா? தன் மகனுக்கு ஸ்டாலின் என்று ஏன் பெயர் வைத்தார்? அது மட்டுமல்லாமல்அவரது குடும்ப டிவிக்கு சன் டிவி என்று ஏன் பெயர் வைத்தார்?
உதட்டளவில், தனது அரசியல் சுயலாபத்துக்காக தமிழ், பண்பாடு என்று சொல்லி கருணாநிதி தன்னை உயர்த்திக்கொண்டாரே தவிர, தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டிற்காக கருணாநிதி இது வரை என்ன செய்தார்?
திராவிடர் கழகத்தின் சார்பில் அவருக்கு அண்ணாசாலையில் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலை சிலரால் இடித்துதள்ளப்பட்டது. மீண்டும் சிலை வைக்க முன் வந்த போது, உயிருடன் உள்ளவருக்கு சிலை வைப்பது நல்லதல்லஎன்று யாரோ சில ஜோதிடர்கள் சொன்னதைக் கேட்டுதான் சிலையே வேண்டாம் என்று கூறினார்.
மஞ்சள் தான் மங்களகரமானது என்று யாரோ சொன்னதை நம்பி இப்போது மஞ்சளாடையை போர்த்தி திரிகிறார்.
அன்றைக்கு கண்ணகி சிலையை அமைப்பதில் இவர் ஆர்வம் காட்ட காரணம், கண்ணகி சிலை வைக்கப்பட்டால்தான் அண்ணா மரணமடைவார் என்று யாரோ சொல்லிய ஆருடம் தான்.
வீட்டிலிருந்து வெளியே புறப்படும்போது கடவுளை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே, கிருஷ்ணன் கோயிலுக்குஎதிராக கோபாலபுரத்தில் வீடு வாங்கினார்.
முன்பு கடற்கரையில் நிறவப்பட்டிருந்த தமிழ்த் தாத்தா உ.வே.சா.வின் உருவச்சிலை அங்கிருந்து மாநிலக் கல்லூரிவளாகத்துக்குள் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது அதை யாரும் எதிர்க்கவில்லை.
கருணாநிதி கூற்றுப்படி இந்த அரசுக்கு ஜோதிடத்தின் மீதோ, வாஸ்து சாஸ்திரத்தின் மீதோ நம்பிக்கைஇருக்குமானால், 1991-96 வரை நடந்த எங்கள் ஆட்சியிலேயே இது போன்ற செயல்களை செய்திருக்கலாம்.கருணாநிதியின் இந்த கபட நாடகத்தைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
கண்ணகி சிலை உரிய நேரத்தில், உரிய இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது. கருணாநிதி சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தால்தான் வயோதிக காலத்தில் அவருக்கு நல்லதுஎன்றார் தம்பிதுரை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications