ரத்தத்தின் ரத்தங்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மீண்டும் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள அரசு ஊழியர்களுக்கு பதில் அரசுஅலுவலகங்களில் வேலை செய்வதற்கு தற்காலிகமாக பணியில் அமர்த்த ஊழியர்களை தேர்வு செய்ய அரசுதிட்டமிட்டுள்ளது. அதில் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்களுக்கு முன்னுரிமை வழங்க திட்டமிட்டுள்ளது.

அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கஜனாவை கருணாநிதி காலி செய்துவிட்டுப் போய்விட்டதாகக்குற்றம் சாட்டியது. அதனால் போக்குவரத்து ஊழியர்களுக்கு 8.33 சதவிதம் மட்டுமே போனசாக வழங்கியது. இதைவாங்க மறுத்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதே போல் கஜானா காலியானதை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகளையும்அரசு அதிரடியாக பறித்தது. பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க கோரி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள்,பேராசிரியர்கள் அரசிடம் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் அரசு மசிவதாக தெரியவில்லை. இதனால் அவர்கள் பிப்ரவரி 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசு திட்டமிட்டுவருகிறது.

அரசு அலுவலகப்பணிகள் பாதிக்கப்படாமல் தொடரும் பொருட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துள்ளவர்களை தற்காலிகமாக தினக்கூலி அடிப்படையில் வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் சீனியாரிட்டி பட்டியலை சம்பந்தப்பட்டபள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை அலுவலகங்களில் சமர்ப்பிக்கும்படி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த தற்காலிக பணிக்கு அதிமுக கட்சியை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அதிமுக வட்டம்,மாவட்டங்களின் சிபாரிசுடன் வருபவர்ளுக்கும் முன்னுரிமை வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. போக்குவரத்துதொழிலாளர் வேலை நிறுத்தத்தின் போதும் அதிமுக தொண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+