ஆப்கானிஸ்தானில் புதிய அரசு பதவியேற்றது: ஜஸ்வந்த் சிங் கலந்து கொண்டார்
காபூல்:
ஆப்கானிஸ்தானின் புதிய அரசு இன்று பதவியேற்றது.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கலந்துகொண்டார். இதற்காக அவர் இன்று காபூல் புறப்பட்டுச் சென்றார்.
இதன்மூலம் தலிபான்களை விரட்டிவிட்டு ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய நார்த்தர்ன் அலையன்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஹமித் கர்சாயிடம் ஒப்படைத்துள்ளது. ஆனால், நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, உள்துறைஅமைச்சகங்கள் நார்த்தர்ன் அலையன்சின் பிரதிநிதிகளிடம் தான் தரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சராக முகம்மத் பகீம் பதவியேற்றார். இவர் நார்த்தர்ன் அலையன்ஸை உருவாக்கி தலிபான்களைஎதிர்த்துப் போராடி வந்த அகமத் ஷா மசூதிடம் உளவுப் பிரிவுத் தலைவராக இருந்தவர். அகமத் ஷா மசூதை பின்லேடனின் ஆட்கள் நிருபர்கள் போல வேடமிட்டுச் சென்று கொன்றுவிட்டனர்.
இந்திய ஆதரவு அமைச்சர்கள்:
அதே போல உள்துறை அமைச்சராக யூசுப் கானூனியும் வெளியுறவு அமைச்சராக டாக்டர் அப்துல்லாஅப்துல்லாவும் பதவியேற்றனர். இந்த 3 பேருமே தீவிரமான இந்திய ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மூவரில் பகீம் மற்றும் கானூனி இருவரும் தஜிக் இனத்தை சேர்ந்தவர்கள். அப்துல்லாவின் பெற்றோர் தஜிக்,புஷ்தூன் கலப்பு மணம் செய்தவர்கள். இதனால் இவர் இரு இனத்தினருக்கும் பொதுவானவர். இந்த மூவரும்வடக்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்.
பிரதமராகப் பொறுப்பேற்கவுள்ள ஹிமீத் கர்சாய் புஷ்தூன் இனத்தைச் சேர்ந்தவர். தெற்கு ஆப்கானிஸ்தானைச்சேர்ந்தவர். தலிபான்களும் புஷ்தூன்கள் தான். புஷ்தூன்கள் தான் நாட்டின் மக்கள் தொகையில் 40 சதவீதம்உள்ளனர்.
இந்தியாவில் படித்த பிரதமர்:
ஹிமித் கர்சாய் இந்தியாவில் ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் பொலிட்டிகல் சயின்ஸ் படித்தவர். கொஞ்சம்பாகிஸ்தான் ஆதரவாளர். அமெரிக்க, இங்கிலாந்து அரசுகள் சொல்வதைக் கேட்டு செயல்படுவார் என்று தெரிகிறது.முன்னாள் ஆப்கானிஸ்தான் மன்னர் ஷகீர் ஷாவின் ஆதரவும் இவருக்கு உள்ளது.
தஜிக், உஸ்பெக், ஹஸாரா மற்றும் பழங்குடியினர் அனைவரும் சேர்ந்து மீது 60 சதவீதம் உள்ளனர்.
புதிய அமைச்சரவையில் அனைத்து இனத்தினருக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால், உஸ்பெக்இனத்தைச் சேர்ந்த ராணுவ கமாண்டர் அப்துல் ரஷீத் தோஸ்தமின் ஆட்களுக்கு கனிம வளம் மற்றும்இன்னொருடப்பா துறை தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த இனத்தினர் எரிச்சலடைந்துள்ளனர்.
இந்த இடைக்கால ஆட்சி 6 மாதம் பதவியில் இருக்கும். அடுத்து 2 ஆண்டுகளுக்கு புதிய ஆட்சி நிறுவப்படும். அந்தகாலகட்டத்தில் நாட்டுக்கு புதிய அரசியல் சட்டம் எழுதப்படும். இந்த ஆட்சியின் இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டுமக்களாட்சி தேர்ந்தெடுக்கப்படும்.
பாதுகாப்பு தீவிரம்:
புதிய ஆட்சி பதவியேற்க உள்ளதையடுத்து காபூலில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நார்த்தர்ன்அலையன்ஸ் படையினர் தவிர யாரும் ஆயுதங்களுடன் திரியக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் படைகளின் கண்காணிப்பில் கீழ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆப்கான் டிவியில் இந்தியப் படங்கள்:
ஆப்கானிஸ்தான் தொலைக் காட்சியில் ஒளிபரப்புவதற்கு திரைப்படங்களை வழங்குமாறு இந்தியாவிடம்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 12 இந்திப் படங்கள் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இந்திப் படங்கள் மிகப் பிரபலமாக இருந்தன. ஆனால், தலிபான் ஆட்சிக்கு வந்தவுடன்தியேட்டர்கள் எரிக்கப்பட்டன. டி.வி. நிலையம் நொறுக்கப்பட்டது. அங்கிருந்த இந்திப் படத்தின் பிரதிகள்எரிக்கப்பட்டுவிட்டன.
இப்போது தலிபான்கள் ஒழிந்துவிட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் டி.வி. செயல்பட ஆரம்பித்துள்ளது. ஆனால்,பழைய திரைப்பட நகல்கள் ஏதும் இல்லை. இதனால், டி.வியில் படங்களை ஒளிபரப்ப முடியவில்லை. இதையடுத்துஇந்தியாவிடம் திரைப்பட நகல்களை கேட்டுள்ளது ஆப்கானிஸ்தான்.
இந்தக் கோரிக்கையை ஏற்று 12 இந்திப் படங்கள் ஆப்கானிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறையால்அனுப்பப்பட்டுள்ளன. மேலும் படங்கள் அனுப்புவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
அதே போல தலிபான்களால் டி.வி., ரேடியோ டிரான்ஸ்பான்டர்கள் சேதப்படுத்தப்பட்டுவிட்டதால், புதியடிரான்ஸ்பான்டர்களை வழங்கி ஈரானும் உதவியுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications