இந்தியா தாக்காது: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உத்தரவாதம்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானை இந்தியா தாக்காது என பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா உத்தரவாதம் அளித்துள்ளதாகக்கூறப்படுகிறது.

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகளைக் குவித்ததையடுத்து ராஜஸ்தான், பஞ்சாப், காஷ்மீர், குஜராத் ஆகியஎல்லைப் பகுதிகளிலும் இந்தியப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் பாகிஸ்தானை பல முனைகளில் இருந்துதாக்க இந்தியா தாக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் உதவுமாறு அமெரிக்காவிடமும் சீனாவிடமும்கோரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கமாறு பாகிஸ்தானை அமெரிக்கா நிர்பந்திக்கஆரம்பித்தது. அதே நேரத்தில் இந்தியா தாக்காது என்ற உத்தரவாதத்தையும் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவழங்கியுள்ளது என பாகிஸ்தானிய பத்திரிக்கையான த டான் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தி விவரம்:

இந்தியத் தலைவர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை இந்தியா தாண்டாதுஎன நம்புகிறோம் என அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானிய அதிகாரிகள் கூறுகையில், பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் சத்தாருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்தொலைபேசியில் பேசினார். அப்போது இந்தியா எல்லையைத் தாண்டி வந்து தாக்காது என உறுதியளித்தார்.

தீவிரவாதத்தை எதிர்க்க அமெரிக்காவுக்கு முழு உதவி செய்து வரும் முஷாரபுக்கு தொல்லை நேருவதை புஷ்தடுத்து நிறுத்துவார் என அந்தப் பத்திரிக்கை கூறுகிறது.

அதே நேரத்தில் லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் எனமுஷாரபை அமெரிக்கா கடுமையாக நெருக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

முஷாரபிடம் இந்த விஷயத்தில் அமெரிக்கா தொடர்ந்து பேசி வருகிறது என இந்தியாவிடம் அமெரிக்கஅதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+