குழந்தையை கடித்துக் குதறிய ஆட்டோ டிரைவர் மிருகம்
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் ஒன்றரை வயதுபெண் குழந்தையை தூக்கி சென்று உடல் முழுவதும் கடித்து காயப்படுத்தி கொலைசெய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் சங்கர் என்பவனை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் தாஸ்கண்ட் நகரில் வசிப்பவர்கள் ராஜா, அவரது மனைவி அலமேலு. ராஜா பழ வியாபாரம் செய்துவருகிறார் இவர்களது ஒன்றரை வயது மகள் மல்லிகா.
தாஸ்கண்ட் நகருக்கு அருகில் அண்ணா நகர் தெருவை சேர்ந்தவர் சங்கர் (26). இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.சங்கர், ராஜா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று ராஜாவின் வீட்டுக்கு சங்கர் சென்றான். அப்போது ராஜா வீட்டில் இல்லை. குழந்தை மல்லிகாவைதூக்கி சென்று சங்கர் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த குழந்தையை திரும்ப வீட்டில் கொண்டுவந்துவிட்டார். ஆனால், அக் குழந்தையின் உடல் முழுவதும் கடிபட்ட காயங்கள் இருந்தன.
இதையடுத்து சங்கரிடம் ராஜா கேட்டபோது, குழந்தை என் மார்பை கடித்து விட்டது. அதனால் நானும் பதிலுக்கு பலஇடங்களில் கடித்தேன் என்று கூறியுள்ளான்.
இதையடுத்து அலமேலு போலீசில் புகார் கூறினார். இதனால் போலீசார் சங்கர் மீது, சிறுமியை கடத்தி சென்று கடித்துகாயப்படுத்தி, கொலை செய்ய முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து, ஆட்டோ டிரைவர் சங்கரை கைதுசெய்தனர்.
கிட்டத்தட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அக் குழந்தையை சங்கர் கடித்துள்ளான்.
இது குறித்து போலீசார் சங்கரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications