இனிமேலும் பொறுத்திருக்க முடியாது: இந்தியா
காபூல்:
இந்தியாவால் இனிமேலும் பாகிஸ்தானின் செயல்களைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது எனவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் ஜஸ்வந்த் சிங் கூறுகையில்,
எங்கள் பொறுமைக்கு எல்லை உணடு. எங்களுக்கு எல்லையில்லா பொறுமை எல்லாம் கிடையாது. பாகிஸ்தானில்இருந்து இந்தியத் தூதரை திரும்ப அழைத்தது நாங்கள் இந்த விவகாரத்தில் எந்த அளவுக்குத் தீவிரமாக உள்ளோம்என்பதை அந் நாட்டுக்கு சுட்டிக் காட்டுவதற்காகத் தான்.
இது வெறும் சிக்னல் தான். இதை பாகிஸ்தான் புரிந்து கொள்ளாமல் மேலும் பிரச்சனையைக் கிளப்பினால் இந்தியாபார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.
நாடாளுமன்றம் என்ற செங்கல் கட்டடத்தை உடைக்க தீவிரவாதிகள் வரவில்லை. இந்தியா என்ற நாட்டை துண்டாடவந்தார்கள். எங்கள் நாட்டின் மீதே நடந்த தாக்குதல் அது.
இந்தத் தாக்குதலுக்குப் பின்னரும் பொறுமையாகத் தான் இருந்தோம். பாகிஸ்தான் திருந்தும் என எதிர்பார்த்தோம்.ஆனால், அது நடக்கவில்லை. இதனால் தான் தூதரை திரும்ப அழைத்துள்ளோம்.
ஆப்கானிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயார். ஒரு இந்திய ராணுவ வீரனின்உணர்வோடு இங்கு நிற்கிறேன். 1996ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி தலிபான் காபூலுக்குள் நுழைவதற்கு 12 மணிநேரத்துக்கு முன் இந்தத் தூதரகத்தை மூடினோம்.
இந்தியா என்பது மாபெரும் சக்தி
இந்தியா ஒரு மாபெரும் சக்தி. இதை உலகமும் உணர ஆரம்பித்துள்ளது. நாங்கள் எங்கள் பலத்தை காட்டவிரும்பவில்லை. ஆனால், வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். இதை யாரும் தடுத்துவிட முடியாதுஎன்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துமா என்று பல நாட்டு நிருபர்களும் கேட்டபோது, இது குறித்துப்பேச நான் இங்கு (காபூல்) வரவில்லை என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications