பா.ம.க. பெண் எம்.எல்.ஏ. கடத்தல்: செங்கோட்டையன் மீது ராமதாஸ் புகார்
சென்னை:
தாராபுரம் எம்.எல்.ஏ. சிவகாமி வின்சென்ட்டை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் கடத்திசென்று மறைத்து வைத்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் புகார் கூறிள்ளார்.
பா.ம.கவை உடைக்க அதிமுக முயன்று வருவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ளன. இந் நிலையில் சிவகாமியைநான்கு நாட்களாக காணவில்லை. அவரை அதிமுகவுக்கு இழுப்பதற்காக செங்கோட்டையன் தான் கடத்திச்சென்றுள்ளதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
தாராபுரம் பெண் எம்.எல்.ஏ. உட்பட ஏழு பேர் அதிமுகவுக்கு ஆதரவாக கட்சி தாவ தயாராகி விட்டதாக நேற்றுதகவல் பரவியது. இதையடுத்து இந்த 7 பேரையும் உடனடியாக தன்னை சந்திக்கும்படி ராமதாஸ் உத்தரவிட்டார்.
ஆனால், சிவகாமியை தவிர மற்ற 6 எம்.எல்.ஏக்களும் வந்து சேர்ந்தனர். இந்த 6 பேரையும் உடன் வைத்துக்கொண்டு இரவோடு இரவாக ராமதாஸ் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எங்கள் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. சிவகாமி, அவரது கணவர் வின்சென்ட் மற்றும் அவரது குழந்தைகளை,அதிமுக தலைமை செயலாளர் செங்கோட்டையன் கடத்திச் சென்று நான்கு நாட்களாக மறைத்து வைத்துள்ளார்.
இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லா விட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications