பணிகிறது பாகிஸ்தான்: தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்கியது
இஸ்லாமாபாத்:
இந்தியாவும் அமெரிக்காவும் கொடுத்து வரும் நெருகுக்குதலுக்குப் பணிந்து லக்ஷர்-ஏ-தொய்பா,ஜெய்ஷ்-ஏ-முகம்மத் உள்பட பல தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்க பாகிஸ்தான்உத்தரவிட்டுள்ளது.
இதன்படி இந்த அமைப்புகளின் சொத்துகள் முடக்கப்படும். பாகிஸ்தானில் உள்ள இந்த அமைப்புகளின்அலுவலகங்கள் மூடப்படும். இந்த அமைப்புகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்.
இதற்கான உத்தரவுகள் பாகிஸ்தானின் மாகாண அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதே போல அமெரிக்காவின் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட டி.ஈ.என். அமைப்பின்சொத்துக்களையும் பாகிஸ்தான் தடை செய்துள்ளது. இந்த அமைப்பு பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகளால்உருவாக்கப்பட்ட தீவிரவாத அமைப்பாகும்.
பாகிஸ்தானுக்கு லக்ஷர் மிரட்டல்:
இந்தத் தடை அறிவிப்பு வருவதற்கு சில மணி நேரத்துக்கு முன் லக்ஷர்-ஏ-தொய்பாவின் செய்தித் தொடர்பாளர்யகியா முகம்மத் கூறுகையில்,
எங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முன் பாகிஸ்தான் அரசு ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். பாகிஸ்தான் மக்கள்எங்களை ஆதரித்து வருகின்றனர் என்பதை முஷாரப் மனதில் கொள்ள வேண்டும்.
எங்களை அமெரிக்கா தடை செய்துள்ளதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. முஸ்லீம்கள் தொடர்ந்து எங்களைஆதரிப்பர். எங்களுக்கு அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ சொத்துக்கள் கிடையாது. சொத்துக்களைஅமெரிக்கா முடக்கினாலும் பிரச்சனையில்லை என்றார்.
இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: லக்ஷர்
இந்த அமைப்பின் தலைவன் ஹபீஸ் முகம்மத் சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாங்கள் இஸ்லாமிய கல்வி தான் போதித்து வருகிறோம். பாகிஸ்தானில் மட்டும் தான் செயல்பட்டு வருகிறோம்.வேறு எந்தத் தவறும் செய்யவில்லை.
காஷ்மீரில் அந் நாட்டு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் போராடி வருகின்றனர். எங்களுக்கு அதில் சம்பந்தமேஇல்லை என்பதை விளக்கி அமெரிக்க வெளியுறவுத்துறைக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
அமெரிக்காவின் செயல்கள் அந் நாடு இந்தியாவுக்கு ஆதரவாக சாய்ந்து வருவதையே காட்டுகிறது.ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலைமையைத் தனக்கு சாதமாக்கிக் கொண்டு அமெரிக்காவை இந்தியாநிர்பந்தித்து வருகிறது என்று கூறியுள்ளான் ஹபீஸ்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications