டான்சி தீர்ப்பு நகலை சு.சாமிக்கு வழங்க ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி தீர்ப்பின் நகலை ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமிக்கு வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.

டான்சி நில பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர்களுக்கு தனி நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தண்டனைவிதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தினகர், ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த 4ம்தேதி தீர்ப்பளித்தார்.

தீர்ப்பு வெளிவந்தவுடன் அந்த தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாகவும்,அதனால் தனக்கு அந்த தீர்ப்பின் நகலை வழங்கும்படியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்சுப்பிரமணியசாமி.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தினகர், தீர்ப்பு என்பது பொது ஆவணம், அதைப் பெற சுப்பிரமணியசாமிக்குஉரிமை உள்ளது, எனவே தீர்ப்பு நகலை அவருக்கு கொடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

டான்சி வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரசுப்பிரமணியம் சுவாமி திட்டமிட்டுள்ளார். ஜனவரி முதல் வாரத்தில் அவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்வார்என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+