தூதர் திரும்ப அழைப்பு: இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் உள்ள தூதரை திரும்ப அழைத்தது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என அமெரிக்கா கருத்துத்தெரிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் பெளசர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்திய மக்களுக்கு எது நல்லது என்பது அந் நாட்டு அரசுக்குத் தெரியும். அதன் அடிப்படையில் இந்தியா இந்தநடவடிக்கையை எடுத்துள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள் விவகாரமாகும்.
மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தீவிரவாத்தை எதிர்த்துப் போரிடவேண்டும் எனக் கோரியுள்ளோம்.
ஜெய்ஷ்-ஏ-முகம்மத்ஸ, லக்ஷர்-ஏ-தொய்பா ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு நாடாளுமன்றத்தில் நடந்ததாக்குதலில் தொடர்புள்ளது என இந்தியா கூறி அதற்கான ஆதாரங்களையும் எங்களிடம் தந்துள்ளது என்றார்.
திருந்தாத புஷ்:
முன்னதாக அதிபர் புஷ் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புதிய பதற்றத்தைத் தணிக்க அமெரிக்கா தீவிரமாக முயன்றுவருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சனை வந்தால் அது அனைவரையுமே பாதிக்கும்.
இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து விசாரித்துஇந்தியாவிடம் தகவல் அளிக்க முயன்று வருகிறோம். இந்தியத் தாக்குதலை நான் மிகக் கடுமையாக எதிர்ப்பதுமாதிரி முஷாரபும் எதிர்க்கிறார். அதனால், அத் தாக்குதலை அவர் கண்டித்தார்.
வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் தொடர்ந்து இந்திய, பாகிஸ்தான் தலைவர்களுடன் தொலைபேசியில்பேசி வருகிறார். இந்த தொலைபேசி பேச்சுக்கள் தொடரும் என்றார்.
கடந்த இரு நாட்களில் காலின் பாவல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப், வெளியுறவு அமைச்சர் அப்துல் சத்தார் ஆகியோருடன் தொலைபேசியில்பேசியுள்ளார்.
ஆனால், அமெரிக்க அதிபரின் பேச்சு தொடர்ந்து அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதையே காட்டுகிறது.மேலும் நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய புஷ் தீவிரவாதிகள் காஷ்மீரில் இருந்து வந்ததாகக் கூறிவெறுப்பேற்றியது முக்கியத்துவம் வாய்ந்தது.
தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் இந்தியர்களே அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள்பாகிஸ்தானியர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.
இருந்தாலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் தயவு தேவை என்பதால்இந்தியாவை இரண்டாம் இடத்தில் வைத்து பார்ப்பதையே அந் நாடு விரும்புகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications