மதுரை அருகே குண்டு வெடித்து 3 சிறுவர்கள் பலி
மதுரை:
மதுரை அருகே சாப்டூரில் விவசாய கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்ததில் 3 மாணவர்கள்இறந்தனர்.
சாப்டூரில் விவசாய சங்க கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் அருகே சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். நேற்று(சனிக்கிழமை) மாலையும் இதே போல் பள்ளி மாணவர்கள் பலர் விளையாடி வந்தனர்.
அப்போது விவசாய கட்டிடம் பூட்டியிருந்தது. மாணவர்கள் சிலர் கதவில் சாய்ந்த போது கதவு திறந்தது. உள்ளேசென்ற சிறுவர்கள் உருண்டை உருண்டையாக வெடிகுண்டுகள் ஏராளமாக கிடந்ததை பார்த்துள்ளனர்.
வெடிகுண்டு என்று அறியாத சிறுவர்கள் அதையும் சாதாரண குண்டு போல் தூக்கி போட்டு விளையாடி உள்ளனர்.இதில் ஒரு குண்டு வெடித்தது. இதனால் கட்டிடத்தில் உள்ள மற்ற குண்டுகளும் மொத்தமாக வெடித்ததில் கட்டிடம்தூள் தூளானது.
இதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பெத்தண்ணன் என்பவரது மகன் ரவிகுமார் (13) இறந்தார். கருப்பையாஎன்பவரின் மகன் தங்கராஜ் மருத்துவமனையில் இறந்தார்.
சுப்பையா என்பவரின் மகன் கதிரேசன் கட்டிட இடிபாடுகளில் இறந்து கிடந்தார். இவரது உடலை மீட்பதற்குஇரண்டு மணி நேரம் ஆனது. சண்முகவேல் என்பவரின் மகன் பாண்டி படுகாயமடைந்து மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஆயுஷ்மணிதிவாரி,டி.எஸ்.பி.கர்ணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்துவருகிறது.
இந்த சம்பவத்தால் சாப்டூரே சோகமயமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் சோகமான முகஙகளும், அழுகுரலுமேகேட்கிறது.
இப்பகுதியில் அடிக்கடி ஜாதி மோதல்கள் நடை பெறுவது வழக்கம். அந்த மாதிரி மோதல்கள் நடந்தால்வீசுவதற்காக கொண்டு வந்த குண்டுகளை தான் யாரோ இங்கு மறைத்து வைத்துள்ளனர். இதைப் போலீசார் பெரியவிஷயமாக கருதவில்லை. இதனால் தான் இந்த விபரீதம் நடை பெற்றுள்ளது.
போலீசார் சரியான நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இனிமேலாவது போலீசார்கெடுபிடியுடன் செயல்படுவது அவசியம்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications