எம்.எல்.ஏக்களை கடத்த வேண்டிய அவசியம் இல்லை: செங்கோட்டையன்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

எம்.எல்.ஏ.க்களை கடத்தி வந்து ஆட்சி செய்ய வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என்று அதிமுகதலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் கூறினார்.

தாராபுரம் பெண் எம்.எல்.ஏ. சிவகாமி வின்சென்ட் மற்றும் அவரது குடும்பத்தினரை செங்கோட்டையன் கடத்திசென்று வைத்திருப்பதாக பாமர நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். செங்கோட்டையன் வீட்டின்முன்பு பாமகவினர் ஆர்ப்பாட்டமும் செய்தனர்.

இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை கடத்தி சென்று ஆட்சி செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் அதிமுகவுக்கு இல்லை.

கூட்டணியில் இருந்து கொண்டே துரோகம் செய்த பாமகவை கடந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாடம்கற்பித்தனர். இதை மறைக்க ராமதாஸ் இவ்வாறு நாடகமாடுகிறார்.

பாமகவின் உட்கட்சி பூசலை மறைக்க இப்படி மற்றவர்கள் மீது பழிபோடுவது கண்டிக்கத்தக்கது. நான் இல்லாதபோது எனது வீட்டுக்கு முன் பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இது அநாகரீகமான செயல். இது போன்றசெயல்களை நிறுத்தாவிட்டால் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் ஜெயலலிதாவை யாரும் அசைக்க முடியாது என்பதை கடந்த இரண்டு தேர்தல் முடிவுகளும்காட்டுகின்றன. பாமகவை வைத்து அதிமுக ஆட்சியை பிடிக்கவில்லை. ஜெயலலிதா யார் தயவையும்எதிர்பார்ப்பவர் அல்ல.

ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிட்டு ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார். இந்த யுகத்தில் யாராலும் ஜெயலலிதாவை வெல்ல முடியாது என்று செங்கோட்டையன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+