நாடாளுமன்ற தாக்குதலில் பாக். தூதரகத்துக்கு தொடர்பு
டெல்லி:
இந்திய நாடாளுமன்ற ஊழியர்களிடம் பாகிஸ்தான் தூதரகம் தகவல்களைப் பெற்று வந்த விவகாரம் வெளியில்தெரியவந்துள்ளதையடுத்து, நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலையே பாகிஸ்தான் தூதரகம் தான் திட்டமிட்டுநடத்தியிருக்குமோ என இந்திய உளவுப் பிரிவினர் சந்தேகமடைந்துள்ளனர்.
முதலில் இந்தத் தீவிரவாதிகள் தாங்களாகவே திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்பட்டது. ஆனால்,இந்திய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த அஜய்குமார் என்ற ஊழியரிடம் இருந்து பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்தஒரு அதிகாரி நேற்று சில ரகசிய தகவல்களைப் பெறும்போது பிடிபட்டார்.
இந்திய ராணுவம், அணு ஆயுதங்கள், கடற்படை, மின்சார கட்டமைப்பு, ரயில்வே கட்டமைப்பு, பாதுகாப்புஅமைப்புகளின் செயல்பாடு ஆகியவை குறித்த ரகசிய தகவல்கள் அடங்கிய நாடாளுமன்ற ரெக்கார்டுகளைபாகிஸ்தான் தூதரக அதிகாரியான் முகம்மத் ஷெரீப் கான் என்பவர் வாங்கும்போது பிடிபட்டார்.
இதனால், நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலையே பாகிஸ்தான் தூதரகம் தான் திட்டமிட்டு நடத்தியதோ என்றசந்தேகம் எழுந்துள்ளது.
அத்வானி கடும் கோபம்:
இது குறித்து உள்துறை அமைச்சர் அத்வானி கூறுகையில், நாடாளுமன்றத்தின் ஆவணங்களை பாகிஸ்தான்தூதரகம் ரகசியமாய் வாங்க முயன்றது மிகக் கடுமையான குற்றமாகும்.
இந்தச் செயலுக்கான விலையை விரைவில் பாகிஸ்தான் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்.
இந்தியாவில் 2வது அல்-கொய்தா தீவிரவாதி கைது:
காஷ்மீரில் முதன்முறையாக பின்லேடனின் அல்-கொய்தா தீவிரவாதி ஒருவன் பிடிபட்டுள்ளான். எம்.எல்.ஏ.விடுதி, ராணுவ அதிகாரிகளின் வீடுகளைத் தாக்க வேவு பார்க்க இந்தியாவுக்குள் நுழைந்துள்ளான்.
24 வயதான அஸயூப் அகமத் சரோகி என்ற அவன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மிரில் வசித்துவருபவன். ஜம்மூ நகரில் தலிப் தில்லோ என்ற இடத்தில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டான்.
ஜம்மூ போலீசின் சிறப்புப் போலீஸ் பிரிவின் வைத்து சிறப்பாக விசாரிக்கப்பட்டு வருகிறான்.
இவன் கொடுத்த தகவலின்படி மும்பை, டெல்லி, உத்தரப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய இடங்களில் அல்-கொய்தாஏற்கனவே தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த இடங்களுக்கு ஜம்மூ போலீசின் சிறப்புப் படையினர் விரைந்துள்ளனர்.
ஏற்கனவே மும்பையில் ஒரு தீவிரவாதி பிடிபட்டுள்ளான் என்பது நினைவுகூறத்தக்கது.
பாகிஸ்தான் சுட்டு 4 பேர் காயம்:
இந் நிலையில் ஜம்மூ-பூஞ்ச் இடையிலான எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டதில்3 இந்திய ராணுவத்தினர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
காஷ்மீர் எல்லை முழுவதுமே பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து துப்பாக்கிகள், மார்ட்டர் ரக துப்பாக்கிகளால்தாக்குதல் நடத்தியவண்ணம் உள்ளனர்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் தாக்குதல் நடந்த வண்ணம் உள்ளது.
இதையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.பூஞ்ச், ரஜெளரி உள்பட பல எல்லைப் பகுதிகளில் இருந்து மேலும் பல கிராமங்களை ராணுவம் காலி செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications