தயார் நிலையில் இந்திய ராணுவம்: பெர்னாண்டஸ்
டெல்லி:
இந்திய ராணுவம் எல்லைக் கோட்டுக்கு அருகில் மிகவும் விழிப்புடன் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்புஅமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தனது எல்லையில் படையை குவித்து வருவதால் இந்திய அரசும் ராணுவத்தை எல்லைகளில் குவித்துவருகிறது. சிறப்பு ரயில்கள் மூலம் ராணுவ வீரர்களும், ஆயுத தளவாடங்களும் சென்று கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பெர்னாண்டஸ் கூறியதாவது:
செப்டம்பர் 11ல் அமெரிக்க தாக்கப்பட்டதுமே இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுவந்தன. நாடாளுமன்றம் தாக்கப்பட்டவுடன் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் நாடாளுமன்றம் தாக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் தன் எல்லைகளில் படைகளை குவித்து வருவதால்,இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது. ஆனால் அவர்கள் போருக்கான எந்த நடவடிக்கைகளிலும்ஈடுபடவில்லை.
இருந்தாலும் நாம் எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதனாலேயே எல்லா படைகளும் தயார்நிலையில் வைக்கப் பட்டுள்ளன.
அணுகுண்டு பயன்படுத்தப்படுமா?
போர் மூண்டால் முதலில் அணுகுண்டு பயன்படுத்தப்பட மாட்டாது. அணுகுண்டு போடப்பட்டால் எவ்வளவுநாசமாகும் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் அணுகுண்டு பயன்படுத்தப்பட மாட்டாது.
ராணுவ வீரர்களுக்கு வீட்டு வசதி
இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் ராணுவ வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வீட்டு வசதி அளிக்கப்படஇருக்கிறது. இதற்காக ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
மூன்று லட்சம் வீடுகள் கட்டப்படும். இதில் திருமணமானவர்கள் குடும்பத்துடன் வசிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்என்று அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications