இனப் பிரச்சனை: இலங்கைக்கு உதவ இந்தியா தயார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இலங்கையில் அமைதி ஏற்படவும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவும் இந்தியா தயாராக உள்ளது என்று இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று(திங்கட்கிழமை) வாஜ்பாயை சந்தித்து, இலங்கையில் அமைதி ஏற்பட இந்தியா உதவுமாறு கேட்டுக் கொண்டார்.மேலும் இரண்டு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவது பற்றியும் இரண்டு பேரும் பேசினர்.

இலங்கைப் பிரதமராகப் பதவியேற்ற பின் அவர் முதலில் பயணம் செய்யும் நாடு இந்தியா தான்.

இந்த சந்திப்பின்போது உடனிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் நிருபர்களிடம் கூறுகையில்,

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்ய இந்தியா தயாராகஉள்ளது. இலங்கையில் அமைதி ஏற்படவும், அங்கு தீவிரவாதம் ஒழியவுமே இந்தியா விரும்புகிறது. அங்குள்ளஅனைத்து இன மக்களுக்கும் சாதகமான வகையில் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என இந்தியா விரும்புகிறதுஎன்றார்.

பின்னர் இலங்கைப் பிரதமர் விக்கிரமசிங்கேயும் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் டைரன்பெர்னாண்டோவும் இந்திய ஜனாதிபதி கே.ஆர். நாராயணனையும் சந்தித்துப் பேசினர். அடுத்ததாக உள்துறைஅமைச்சர் அத்வானியையும் சோனியா காந்தியையும் அவர் சந்தித்துப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+