லஷ்கர்--ஏ-தொய்பா அமைப்பின் தலைவன் பதவி விலகல்
இஸ்லாமாபாத்:
நாடாளுமன்றத்தைத் தாக்கிய லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைவன் ஹபீஸ் முகம்மத் சயீத் அந்தப் பதவியிலிருந்துவிலகுவதாக அறிவித்துள்ளான். பாகிஸ்தானில் இருந்து இந்த அமைப்பின் செயல்பாட்டை முழுவதுமாக நிறுத்திக்கொள்வதாகவும் கூறியுள்ளான்.
இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் இந்திய, அமெரிக்க நெருக்குதலால் பாகிஸ்தான் அரசால் முடக்கப்பட்டன.
மேலும் இந்த அமைப்பின் தலைவர்களைக் கைது செய்ய வேண்டும் என இந்தியா கூறி வரும் நிலையில் சயீத் இந்தஅறிவிப்பை வெளியிட்டுள்ளான். பாகிஸ்தான் அரசின் யோசனையின்பேரில் இந்த நாடகத்தை அவன்நடத்துகிறானோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
தனது அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டவுடன் லாகூரில் நிருபர்களை சந்தித்த சயீத் கூறுகையில்,இந்தியாவின் தவறான பிரச்சாரத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்படுவதைத் தடுக்கத்தான் பதவியை ராஜினாமாசெய்கிறேன். இனி மதப் பிரச்சாரத்துடன் நிறுத்திக் கொள்வேன்.
இனி இந்த அமைப்பின் தலைவராக காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்த அப்துல் வகீத் இருப்பார். இவருக்குஎங்கள் அமைப்பின் 14 பேர் கொண்ட குழு வழிகாட்டும். இந்தக் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும்காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
லஷ்கர்-ஏ-தொய்பாவின் தலைமை அமைப்பான மர்காஸ்-அட்-தாவா-வல்-இர்ஷத்தின் பெயர் இனிஜமாத்-உல்-தாவா என்று மாற்றப்படும் என்றான் சயீத்.
புதிய தலைவனாக நியமிக்கப்பட்டுள்ள வகீத் இப்போது சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் இருக்கிறான்.
பதவி விலகிய சயீத் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். இப்போது தலைவனாகியுள்ள வகீத் இந்தியாவைச் சேர்ந்தவன்.வகீத் மூலமாக தீவிரவாதத்தைத் தூண்டினால் அது பாகிஸ்தன்ை நடத்தும் தாக்குதல் அல்ல, காஷ்மீரிகள் நடத்தும்தாக்குதல் என பேசுவதற்கு பாகிஸ்தானுக்கு வசதியாக இருக்கும்.
இதனால், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் ராணுவ ஆட்சியார் பர்வேஸ் முஷாரபும் திட்டமிட்டு இந்த நாடகத்தைநடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
லஷ்கரின் தலைமை அமைப்பான மர்காஸ்-அட்-தாவா-வல்-இர்ஷத் அமைப்புக்கு பாகிஸ்தானில் பல சொத்துக்கள்உள்ளன. மதப் பள்ளிகள் என்ற பெயரில் தீவிரவாதத்தையும் மதப் பழமைவாதத்தையும் போதித்து வருகிறது இந்தஅமைப்பு.
ஒசாமா பின் லேடனின் அல்-கொய்தாவுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது இந்த அமைப்பு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications