தேசிய கீதம்: இந்திய உதவி கேட்கும் ஆப்கானிஸ்தான்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இருந்த அனைத்து இசைக் கருவிகளையும் தலிபான்கள் உடைத்துப் போட்டுவிட்டதால், தேசியகீதத்தை இசைக்க இசைக் கருவிகளை அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கைவிடுத்துள்ளது.
இப்போது அங்கு தேசிய கீதம் இசைக்கக் கூட இசைக் கருவிகள் இல்லை. தேசியகீதம் அடங்கிய ஒரே ஒரு கேசட்மட்டும் தான் அந் நாட்டில் உள்ளது. சமீபத்தில் அந் நாட்டு அரசு பதவியேற்றபோது டேப் ரெக்கார்டரில் தேசியகீதம் போடுவதற்காக கேசட்டைத் தேடியபோது ஒரே ஒரு கேசட் தான் அந்த நாட்டிலேயே இருப்பதுதெரியவந்தது. கேசட்டின் தரம் மிக மோசமாக இருந்ததால் அதுவும் இழுத்துப் பிடித்துப் பாடியது.
பதவியேற்பில் இருந்த கலாச்சார அமைச்சரின் பார்வைக்கு இந்த விவகாரம் வந்தவுடன் அதிர்ந்துபோன அவர்உடனடியாக இந்திய அரசைத் தொடர்பு கொண்டார். உடனடியாக ஆர்மோனியம், தபேலா, சரோட், சிதார்,தம்பூரா, சாரங்கி, வயலின், கிதார், பியானோ, புல்லாங்குழல், பாஞ்சோ டிரம்கள், டோல் ஆகிய இசைக் கருவுகளைஅனுப்பி வைத்து உதவுமாறு அவசர தகவல் அனுப்பியுள்ளார்.
இந்தியாவிடம் மட்டும் தான் இந்த உதவியைக் கோரியுள்ளோம். இந்தியாவால் தான் எங்கள் கலாச்சாரத்தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க முடியும் என அமைச்சக அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.
ஒரு நாட்டின் இதய ஓசை மாதிரியான தேசிய கீதத்தையே அழித்துவிட்டுப் போயிருக்கிறது தீவிரவாதம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications