உடைகிறது பாமக: 10 எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் சேர தயார்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் உடைகிறது. அந்தக் கட்சியின் பெண் எம்.எல்.ஏவான சிவகாமி வின்சென்ட்உள்பட 10 எம்.எல்.ஏக்கள் விரைவில் அதிமுகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தாராபுரம் தொகுதியிலிருந்து பாமக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் சிவகாமி வின்சென்ட். திடீரெனஇவரை சில நாட்களுக்கு முன்பு காணவில்லை.
அதிமுக தலைமை நிலையைச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன்தான் அவரைக் கடத்திச் சென்று விட்டதாகபாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் புகார் கூறினார்.
அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் செங்கோட்டையன் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் இதைசெங்கோட்டையன் மறுத்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார் சிவகாமி வின்சன்ட் தான் கடத்தப்படவில்லைஎன்றும், மருத்துவ சிகிச்சைக்காக கேரளாவுக்கு சென்றிருந்ததாகவும் அவர் தெவித்தார். தொடர்ந்து அவர்கூறுகையில்,
எனது குறைகளை நான் சொல்ல டாக்டர் ராமதாஸை அணுகியபோதெல்லாம் அவர் என்னை சந்திப்பதை தவிர்த்துவந்தார்.
இதனால் தனித்துச் செயல்பட முடிவு செய்துள்ளேன். எந்தக் கட்சியிலும் நான் சேரவில்லை, அதுபற்றி ஒன்றும்முடிவெடுக்கவில்லை. இப்போதைக்கு சட்டசபையிலும், வெளியிலும் தனித்து செயல்படுவேன்.
எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல்கள் வந்து கொண்டுள்ளன. இதுதொடர்பாக போலீஸில்பாதுகாப்பு கேட்டு புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்றார் சிவகாமி.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் அதிலிருந்து விலகி அதிமுகவில் சேர முயன்று வருவதாகசில நாட்களாகவே பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முதல் எம்.எல்.ஏ. வாக சிவகாமி வின்சன்ட் பாமகவுடன் கருத்து வேறுபாடு கொண்டு தனித்துசெயல்படப் போவதாக அறிவித்துள்ளார். சட்டசபையில் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவார் என்றுதெரிகிறது.
சிவகாமியைத் தொடர்ந்து மேலும் 9 எம்.எல்.ஏக்கள் பாமகவிலிருந்து வெளியேறுவார்கள் என்று கூறப்படுகிறது.அதிமுக தலைமையுடன் அவர்கள் பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மொத்தம் 20 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து 10 எம்.எல்.ஏக்கள் வரைவிலகினால் அந்தக் கட்சி உடைந்து விட்டதாக அங்கீகரிக்கப்படும். ஆனால் பிரிந்து வரும் 10 எம்.எல்.ஏக்களின்பதவிகள் பறிபோகாது.
முதல் கட்டமாக சிவகாமியும், அவரைத் தொடர்ந்து மேலும் 9 எம்.எல்.ஏக்களும் வெளியேறுவார்கள் என்றுகூறப்படுகிறது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications