மிதக்கிறது சென்னை: தொடரும் கன மழை
சென்னை:
சென்னை நகரில் கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக சென்னையின்பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் மிதக்கின்றன.
வட கிழக்குப் பருவ மழை நீடிப்பதாலும், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்காரணமாகவும் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாக சென்னை நகரில் தொடர்ந்து நான்கு நாட்களாக பேய் மழை பெய்து வருகிறது. மழை மேலும் இரண்டுநாட்களுக்கு நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக சென்னை நகரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பெரும்பாலானபகுதிகள் மழை நீரில் மிதக்கின்றன. வெள்ளம் பாதித்த நகர் போல சென்னை காணப்படுகிறது.
நகரின் தாழ்வான பகுதிகள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளன. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டதால் அந்த வீடுகளில் வசித்து
வந்த மக்கள் அரசுப் பள்ளிகளில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
தண்ணீர் தேங்கிக் கிடக்கும் பல பகுதிகள் குளங்கள் போலக் காணப்படுகின்றன. இவற்றில் சிறுவர்களும்,பெரியவர்களும் மீன்கள் பிடித்துக் கொண்டிப்பதைக் காண முடிகிறது.
பல பகுதிகளில் பெரிய, பெரிய தெர்மாகூல் அட்டைகளை படகுகள் போல பொதுமக்கள் பயன்படுத்தி தாங்கள்நினைக்கும் இடத்திற்குப் போய் வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக பல தார்ச்சாலைகள் பெயர்ந்து போய் பள்ளம், பள்ளமாகி விட்டன. பல சாலைகள்போக்குவரத்திற்கே லாயக்கற்றதாகி உள்ளது. மழை மேலும் சில நாட்களுக்கு நீடித்தால் பொதுமக்கள் பெரும்அவதிக்குள்ளாக நேரிடும் சூழ்நிலை உள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications