எதிர்க் கட்சிகளை அழிக்க ஜெ. சதி: ராமதாஸ் புகார்
டெல்லி:
தேர்தலில் எங்களோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்ற பின் எங்களைக் கழற்றி விட்டதோடு நில்லாமல் எதிர்க்கட்சிகளை அழிக்கவும் ஜெயலலிதா சதி செய்கிறார் என்று பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) ராமதாஸ் கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்கு 77வது பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காக ராமதாஸ் இன்று (திங்கட்கிழமை) டெல்லிக்கு சென்றார்.அவருடன் பாமக எம்.பி.க்களான பொன்னுசாமி, ஏ.கே.மூர்த்தி, பி.டி.இளங்கோவன், என்.டி.சண்முகம், எம்.துரைஆகியோரும் சென்றனர்.
வாஜ்பாயுடனான சந்திப்பு பற்றி ராமதாஸ் கூறியதாவது:
இலங்கை இனப் பிரச்சினை தீர்வதற்கு இது தான் சரியான தருணம் என்று வாஜ்பாய் கூறினார். இதை இலங்கைபிரதமரிடமும் தெரிவிக்கப் போவதாகவும் பிரதமர் உறுதி அளித்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் எங்களோடு கூட்டணி வைத்துத்தான் அதிமுக அரசால் வெற்றிபெற முடிந்தது.ஆனால் வெற்றி பெற்ற பிறகு எங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. இதனால்தான் நாங்கள் கூட்டணியை விட்டுவெளியேறினோம்.
ஆனால் அதோடு ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளவில்லை. இப்போது முக்கிய எதிர்க் கட்சிகளை அழிக்கும்முயற்சியிலும் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆனால் இதற்கெல்லாம் நாங்கள் அசந்து போய்விட மாட்டோம். ஆண்டிப்பட்டியில் அவரை எதிர்த்துப் பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாமகதான் முதலில் கூறியது. இதை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள்,தமாகா போன்ற கட்சிகளும் கூட ஆமோதித்துள்ளன என்றார் ராமதாஸ்.
தீவிரவாதத்துக்கு எதிராக வாஜ்பாய் அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுப்போம் என்றும் ராமதாஸ்கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications