பாமக அழிய நானும் ஒரு காரணம்: வாழப்பாடி கவலை
சேலம்:
தமிழகத்தில் பாமக அழிவதற்கு நானும் ஒரு காரணமாக இருந்து விட்டேன் என்பதற்காக மிகவும் வருந்துகின்றேன்என்று சேலத்தில் நடந்த வன்னியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்தி கூறியுள்ளார்.
சேலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த வன்னியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் வாழப்பாடி ராமமூர்த்திபேசியதாவது:
வன்னியர் சமுதாய மக்களை வாழ வைக்க மட்டுமே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பழையபடி நாங்கள்வன்முறையை தான் நாடுவோம் என்று நீங்கள் சொன்னால் நான் இந்த சங்கத்தை விட்டு விலகி விடுவேன்.
நமது சமூகத்தில் 80 சதவிகிதம் பேர் முன்னேற முடியாமலும், படிக்க முடியாமலும், வேலை கிடைக்காமலும் இருந்துவருகின்றனர். நமக்கு சண்டை முக்கியமல்ல.
நம் மக்களை ஏமாற்றி தன்னையும் தன் குடும்பத்தையும் வளமாக்கி கொண்டவர் ராமதாஸ். அவரது கட்சியை போலநமது சங்கம் இருக்க நான் விரும்பவில்லை.
தமிழகத்தில் பாமக அழிய நானும் ஒரு காரணமாக இருந்து விட்டேன் என்பதற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்.20 எம்.எல்.ஏ.க்களை வைத்து கொண்டு ராமதாஸ் அரசியல் கட்சிகளோடு பேரம் நடத்தி கொண்டு இருக்கிறார்.
வன்னியர்களுக்கு முன்பு நண்டு என்ற பட்ட பெயர் இருந்தது. தற்போது தவக்களை என்கின்றனர். கூட்டணி விட்டுகூட்டணி தாவிக்கொண்டு இருக்கும் ராமதாஸை வைத்து தான் இந்த பெயரை வைத்துள்ளனர்.
பாண்டிச்சேரியில் பாமக ஆட்சியை அமைப்போம் என்று சொன்ன ராமதாஸ், வன்னியரான ரங்கசாமிமுதல்வராக்கப்பட்ட போது ஏன் சென்று பார்க்கவில்லை.
எனவே வன்னியர்களுக்கு வழி செய்யவே இந்த சங்கம் துவக்கப்பட்டது. குடும்பத்துக்கு ரூ.10 வசூல் செய்யுங்கள்.அதிலிருந்து கல்வி உதவித்தொகை கொடுப்போம். கல்லூரி, மண்டபங்கள் கட்டுவோம்.
நமக்கு சண்டை சச்சரவுகள் தேவையில்லை. கலவரத்தை தூண்டி விட்டு மீன் பிடிக்க பார்க்கிறார் ராமதாஸ்,மாட்டிக்கொள்ளாதீர்கள் என்று அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications