பாமகவினர்தான் என்னை மிரட்டுகிறார்கள்: சிவகாமி கதறல்
சென்னை:
நான் ஒரு தலித் என்பதால் பாமகவினர்தான் என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கடத்தப்பட்டதாகக்கூறப்பட்ட அக்கட்சியின் பெண் எம்.எல்.ஏவான சிவகாமி வின்சென்ட் கதறி அழுதபடி கூறினார்.
சிவகாமியை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்தான் கடத்திச் சென்றுவிட்டார் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சிவகாமி மறைத்து வைத்திருக்கும் இடம் தெரிந்து விட்டதாகவும், அவரை மீட்கப் போகவதாகும்செங்கல்பட்டு பாமக எம்.பியான மூர்த்தியின் அலுவலகத்திலிருந்து அக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்குத்தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு பாமக மகளிர் அணியினர் வேனில் புறப்பட்டு,சபாநாயகர் காளிமுத்து வீட்டின் முன்பு இறக்கி விடப்பட்டனர். பத்திரிக்கை நிருபர்களும் அங்குவரவழைக்கப்பட்டனர்.
பின்னர், சிவகாமியை விடுதலை செய்ய சொல்லி மகளிர் அணியினர் கோஷம் எழுப்பினர். உடனே அங்குபோலீசார் குவிக்கப்பட்டதால் மகளிர் அணியினர் கலைந்து சென்றனர்.
பின்னர் மாலை 5 மணிக்கு எம்.எல்.ஏ. விடுதியில் நிருபர்களைச் சந்தித்த சிவகாமி கூறியதாவது:
எனக்கு பாமகவில் இருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. நான் தலித் என்பதால் பாமகவினர் என்னைத்தனிமைப்படுத்தி விட்டனர்.
அதனால் இனி நான் தனித்து செயல்பட முடிவு செய்துள்ளேன். அடுத்தகட்ட முடிவு பற்றி விரைவில் முடிவுஎடுப்பேன் என்று சிவகாமி கூறினார்.
நிருபர்களிடம் பேட்டி அளித்து முடித்தவுடன் அவர் கதறி கதறி அழுதார். இதையடுத்து நிருபர்கள் மத்தியிலும்தமிழக மக்கள் மத்தியிலும் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications