இளங்கோவன் என்ன "கருணாநிதி காங்கிரஸா"? - யசோதா கேள்வி
சென்னை:
என்னை "ஜெ. காங்கிரஸ் என்று சொன்னால், இளங்கோவனை "க. காங்கிரஸ்" என்று சொல்லலாமா என்று தமிழகசட்டசபை காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏவுமான யசோதா கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீப காலமாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் யசோதாவும்மாறி மாறி தாக்கி அறிக்கை விட்டு கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன் யசோதாவின் போக்கை கண்டித்து, இளங்கோவன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து யசோதாவும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இவரின் தந்தை சம்பத் திமுகவை விட்டு வெளியேறி தமிழ் தேசிய கட்சி ஆரம்பித்த போது கருணாநிதி அதை குட்டிகாங்கிரஸ் என்றார். நான் எந்த கட்சியும் ஆரம்பிக்காத போது இளங்கோவன் என்னை "ஜெ. காங்கிரஸ்" என்றுகூறுகிறார். எனவே அவரை நான் "க. காங்கிரஸ்" என்று அழைக்கலாமா?
ஆதாரமற்ற, அற்பத்தனமான இந்த அறிவிப்பை அவர் நிரூபித்தாக வேண்டும். இப்படி வாய்க்கு வந்தபடி சொந்தகட்சிக்காரர்களை இழிவு படுத்துவது யாரை மகிழ்விப்பதற்காக என்று தெரியவில்லை.
ராஜீவ் காந்தியின ராணுவத்தை வரவேற்க மாட்டேன் என்று ராஜீவை பழித்தவரோடும், இந்திரா காந்தியின் அஸ்திசென்னைக்கு வந்த போது ஒரு மலர் வளையம் கூட வைக்காத திமுக தலைமையுடன் இவருக்கு நெருக்கம் அதிகம்.
எனக்கு யாரும் அறிக்கை எழுதி தர வேண்டியதில்லை. அந்த அளவுக்கு என் திறமையை குறைத்து மதிப்பிடுகிறார்.இந்திரா காந்தியால் "பைட்டிங் காக்" என்ற அழைக்கப்பட்டவள் நான். காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு பத்து முறை சிறை சென்றுள்ளேன்.
சோனியா காந்தியின் அன்புக்கு பாத்திரமான என்னை காரணமில்லாமல் இவர் கேவலப்படுத்துவதை தொண்டர்கள்யாரும் ஏற்க மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications