புளியங்குடி ஆட்டோ டிரைவரை மணந்த இங்கிலாந்து மாணவி
புளியங்குடி:
திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடிக்கு படிக்க வந்த இங்கிலாந்து மாணவிக்கும் ஆட்டோ டிரைவருக்கும் காதல்ஏற்பட்டு, இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
வெளிநாடுகளிலிருந்து உயர்கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் தமிழ்நாட்டுக்கு வருவது வழக்கம். அதே போலஇங்கிலாந்தில் இருந்து லண்டன் அருகே ஷிம்பிள்டன் பகுதியை சேர்ந்த அன்னா செவில்லா கார்டன் (25) என்றகல்லூரி மாணவி உட்பட 4 மாணவிகள் தமிழ் நாட்டுக்கு வந்தனர்.
இவர்கள் மூன்று மாதத்துக்கு முன்பு சுற்றுப்புற சூழல் தாவரவியல் ஆராய்ச்சி செய்வதற்காக நெல்லை மாவட்டம்புளியங்குடியில் உள்ள ஒரு பள்ளியில் தங்கி ஆய்வு செய்து வந்தனர்.
தினமும் பஸ் ஏறுவதற்கு புளியங்குடி பஸ் நிலையத்துக்கு அன்னா வருவது வழக்கம். அப்போது பஸ் நிலையத்தில்ஆட்டோ ஓட்டி வந்த சாமி என்ற இளைஞரை பார்த்தார். சாமியைக் கண்டதும் அவருக்குக் காதல் ஏற்பட்டது.
பிறகு சில நாட்கள் கழித்து தனது தோழிகளுடன் சென்று சாமியிடம் தனது காதலை தெரிவித்தார். சாமியும் சம்மதம்தெரிவித்தார். இருவரும் கன்னியாகுமரி, குற்றாலம் என்று ஜாலியாக சுற்றுலா சென்று வந்தனர்.
பிறகு சாமியின் பெற்றோருக்கு தங்களது காதலை தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கப்பட்டது. இவர்களதுதிருமணம் இந்து முறைப்படி நடந்தது.
அன்னா பட்டுபுடவை கட்டி, வளையல் அணிந்து இருந்தார். திருமணம் முடிந்தவுடன் சாமி அவருக்கு மெட்டிஅணிவித்தார்.
பிறகு அன்னா நிருபர்களிடம் கூறியதாவது,
இந்தியாவை சேர்ந்த நான் திருமணம் செய்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இன்னும் நான்கு மாதம் கழித்து படிப்பு முடிந்தவுடன் கணவர் சாமியையும் அழைத்து கொண்டு லண்டன்செல்வேன். அங்கு அவருக்கு வேலை வாங்கி கொடுப்பேன் என்றார் அன்னா.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications