இலங்கையில் போர்நிறுத்தம் அமல்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளின் ஒருமாத கால போர் நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்குவந்ததையடுத்து, இலங்கை ராணுவமும் போர் நிறுத்ததை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கடைப்பிடிக்கிறது.
இதற்கு உதவும் பொருட்டு டிசம்பர் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஒரு மாத போர் நிறுத்தம் செய்வதென விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர்.
இதை வரவேற்ற இலங்கை அரசும், ஒரு மாத காலப் போர் நிறுத்தத்தில் ராணுவமும் ஈடுபடும் என்றுதெரிவித்திருந்தது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் விடுதலைப் புலிகளின் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் தன் படையினருக்கு இதுகுறித்து உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து இலங்கை ராணுவமும் போர் நிறுத்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்துராணுவ செய்தி தொடர்பாளர் சனத் கருணரத்னே கூறுகையில்,
விடுதலைப்புலிகளின் கைவசமுள்ள வடக்கு இலங்கையிலும், கிழக்கு இலங்கையிலும் போரை நிறுத்துமாறுஇலங்கை படைகளுக்கு அறிவிப்பு அனுப்பியுள்ளது.
அதனால் இலங்கை ராணுவம் போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. விமான தாக்குதலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகள் ராணுவ ஆயுதங்களை கடத்தி விடுவார்களோ என்று அஞ்சும் இலங்கைகடற்படையினர் மட்டும் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விமானப் படையும்அவர்களுக்கு உதவி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் விஜயம் மேற்கொண்டுள்ள விக்கிரமசிங்கே, இந்தப் போர் நிறுத்தம் மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கப்படலாம் என்று கூறியுள்ளதாக கருணரத்னே கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications