ராணுவ தின அணிவகுப்பு ரத்து: குடியரசு தின அணிவகுப்பு நடக்கும்
டெல்லி:
ஆண்டுதோறும் ஜனவரி 15ம் தேதி டெல்லியில் நடக்கும் ராணுவ தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்திய வரலாற்றிலேயே முதன்முதலாக இந்த அணி வகுப்பு ரத்து செய்யப்படுகிறது.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தை குவித்துள்ளதால், அதை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இந்தியப் படைகள், ஆயுதங்கள் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தானுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால்அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இது தொடர்பாக ராணுவத் தளபதி ஜெனரல் எஸ்.பத்மநாபன் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஆனால், இந்தியா கேட்டில் அமர்ஜவான் ஜோதியில் நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்நிகழ்ச்சி கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன், பிரதமர்வாஜ்பாய் ஆகியோர் நிச்சயம் பங்கேற்பர்.
குடியரசு தின அணிவகுப்பும் ரத்து இல்லை:
அதே நேரத்தில் குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதி நடத்தப்படும் அணி வகுப்பும் ரத்து செய்யப்படும் என்றுகூறப்பட்டது. ஆனால், இதை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மறுத்தார். இந்த அணிவகுப்பு நடக்கும்என்ற அவர், ஆனால் அதில் பங்கேற்கும் வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருக்கும்என்றார்.
பாகிஸ்தானை அடக்குவோம்- அத்வானி:
உள்துறை அமைச்சர் அத்வானி நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஒரு ஆயுதமாகபயன்படுத்த விடாமல் தடுக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு.
போரை இந்தியா விரும்பவில்லை. தீவிரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தான் விரும்புகிறோம்.தீவிரவாதிகளை சமாளிப்பது பெரிய விஷயமல்ல. ஆனால், தீவிரவாத்தை ஒரு நாடே தூண்டிவிடும்போது தான்பிரச்சனை. ஆனால், இதற்கு அந்த நாடு பெரிய விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications