சென்னையில் கோஷ்டி மோதல்: துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
சென்னை:
சென்னை பெரியமேட்டில் நடந்த கோஷ்டி மோதலில் துப்பாக்கிச் சூடு நடந்ததால், குண்டு பாய்ந்து ஒருவர்பலியானார். மற்றொருவருக்கு காயம் ஏற்பட்டது.
சென்னை பெரியமேடு ரொட்டிக்காரன் தெருவில் சங்கீதா டிராவல்ஸ் பார்சல் குடோனின் உரிமையாளர் ரகு (39).இவர் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர்.
இந்த பார்சல் நிறுவனத்தின் அருகே சந்தர்லோக் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் சென்ட்ரல் ராஜா (35) என்றஅதிமுக பிரமுகர். முதலில் புரட்சி பாரதம் என்ற கட்சியில் இருந்து சமீபத்தில் தான் அதிமுகவில் சேர்ந்துள்ளார்.சென்ட்ரல் ரயில் நிலைய போர்ட்டர்கள் சங்கத் தலைவராகவும் உள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்ட்ரல் ராஜாவின் பெரியம்மா இறந்து போனார். சாவுக்கு துக்கம் விசாரிக்கவந்தவர்கள் அவர் வசித்த அடுக்கு மாடி குடியிருப்பு முன்பு கூட்டமாக கூடி நின்றனர்.
கூட்டத்தில் ஒரு பகுதியினர் பஸ் பார்சல் குடோன் முன்பு நின்று கொண்டு இருந்தனர். பஸ் பார்சல் நிறுவனஉரிமையாளர் ரகு அவர்களை தள்ளி நிற்கும்படி கூறியும், அவர்கள் தள்ளி நிற்க முடியாது என்று கூறிவிட்டனர்.
இதில் வாக்கு வாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ரகுவை கீழே தள்ளி தாக்கியுள்ளனர்.இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த நேரத்தில் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் கைத்துப்பாக்கியால் 3 ரவுண்டு சுட்டுள்ளார். உடனே மோதலில்ஈடுபட்டவர்கள் கலைந்து ஓடினர்.
துப்பாக்கி குண்டு ஒன்று ராஜாவின் மெய்க்காப்பாளரும், உறவினருமான தினகரின் (29) வலது தோள் பட்டையில்குண்டு பாய்ந்தது. அவரை உடனே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதேபோல் பார்சல் நிறுவனத்தின்ல் வேலை பார்த்த கேசவன் (19) என்ற வாலிபரின் வலது காலிலும் குண்டு காயம்ஏற்பட்டது. அவரை சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மோதலில் தலையில் காயம் பட்ட பஸ்பார்சல் உரிமையாளரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சென்ட்ரல் ராஜாவையும் அவரதுகோஷ்டியை சேர்ந்த பத்து பேரையும், ரகுவின் நிறுவனத்தில் வேலை பார்த்த 10 ஊழியர்களையும் போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை குண்டு காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications