இந்திய ஏவுகணைகளும் தயார்: பெர்னாண்டஸ்
டெல்லி:
எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணைகளைக் குவித்து வரும் நிலையில் இந்தியாவின் ஏவுகணைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
அக்னி-1 ரக ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது 2,500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும்திறன் கொண்டது. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயார்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை.
ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய இடங்களில் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் ஜனவரி முதல் வாரகத்தில் போர்பயிற்சியில் ஈடுபடும் என்றார்.
எல்லையில் இந்தியாவை நோக்கி பல ஏவுகணைகளை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது. சீனாவில்தயாரிக்கப்பட்ட எம்-11, எம்-9 ஆகிய ஏவுகணைகளும், இவை 600 முதல் 750 கி.மீ. வரை பாய்ந்து சென்றுதாக்கும் திறன் கொண்டவை. இவை தவிர 1150 முதல் 1500 கி.மீ. பாயும் திறன் மிக்க கோரி-1, கோரி-2, 2500கி.மீ. பாயும் திறன் கொண்ட சகீன்-2 ஆகிய ஏவுகணைகளையும் பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்துள்ளது.
இதற்கு எதிராக 150 கி.மீ. பாயும் பிரித்வி-1, 1500 கி.மீ. பாயும் அக்னி-1 ஆகிய ஏவுகணைகளை இந்தியாஎல்லைக்கு அனுப்ப ஆரம்பித்துள்ளது. இவற்றை நடமாடும் லாஞ்சர்கள் மூலம் செலுத்த முடியும் என்பதால்,தேவைப்பட்ட இடத்திற்கு விரைவாக அனுப்ப முடியும். இந்த ஏவுகணைகளை ராணுவத்தின் 333 ஏவுகணைப்பிரிவு தான் செலுத்தும்.
இவை தவிர ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பல ஏவுகணைகளும் இந்தியாவிடம் உள்ளன.
ரஷ்யாவிடமிருந்து அதிநவீன டி-90 ரக டாங்கிகளும் இந்த மாத இறுதியில் இந்தியா வந்திறங்கவுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications