லஷ்கர், ஜெய்ஷ் அமைப்புகளுக்கு அமெரிக்கா, பாக், ஐ.நா. தடை
வாஷிங்டன்:
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையடுத்து அதைத் தணிக்கும் முயற்சிகளில்அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் பாகிஸ்தானும் இந்த அமைப்புகளைத்தீவிரவாத அமைப்புகளாக அறிவித்து அவற்றைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தத் தடைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் நேற்று இரவில் இரண்டு முறை தொலைபேசியில் பேசினார்.
முன்னதாக பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபுடனும் அவர் இரு முறை தொலைபேசியில்பேசினார்.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று முஷாரப் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.எனவே, எல்லையில் இந்தியா படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று கோரியுள்ளது.
ஆனால், இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி வரும் பாகிஸ்தான் அதை நிறுத்தாவிட்டால் இந்தியப்படைகள் மேலும் குவிக்கப்படும் எனவும் எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும்இந்தியா கூறிவிட்டது.
இந் நிலையில் இந்த இரு தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்க உலக நாடுகள் அனைத்துக்கும் ஐக்கியநாடுகள் சபை உத்தரவிட்டுள்ளது.
இந்த இரு தீவிரவாத அமைப்புகளையும் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. தான் உருவாக்கிஇந்தியாவுக்குள் அனுப்பி வருகிறது. இவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பின்லேடனின் உதவியுடன் அவனதுமுகாம்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
அமெரிக்காவுக்கு லஷ்கர் கண்டனம்:
தங்கள் அமைப்புக்குத் தடை விதித்த அமெரிக்காவுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா சயீப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின்முஷாபராபாத் நகரில் இருந்து பத்திரிக்கைகளுக்கு அனுப்பிய பேக்ஸ் செய்தியில், இந்தியாவுக்கு ஆதரவாகஅமெரிக்கா செயல்படுகிறது. நாங்கள தீவிரவாதிகள் அல்ல. சுதந்திரப் போராட்ட வீரர்கள்.
நாங்கள் காஷ்மீரில் மட்டும் தான் செயல்பட்டு வருகிறோம். பிற பகுதிகளைத் தாக்குவதில்லை.
எங்களுக்குத் தடை விதித்தன் மூலம் முஸ்லீம்களுக்கு எதிராக அமெரிக்கா செயல்படுகிறது. இந்தத் தடையால்நாங்கள் மேலும் வளர்வோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications