இன்று மீண்டும் மத்திய பாதுகாப்புக் குழுக் கூட்டம்
டெல்லி:
பாகிஸ்தானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இன்று(வியாழக்கிழமை) மாலை மீண்டும் கூடி விவாதிக்கிறது.
இமயமலையில் சியாச்சின் பகுதியில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் புறப்பட முடியாதகாரணத்தால் நேற்றைய கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசால் கலந்துகொள்ளமுடியவில்லை.
இதையடுத்து இன்று டெல்லி திரும்பினார் பெர்னாண்டஸ். இன்று நடக்கும் கூட்டத்தில் எல்லைப் பகுதிகளில்மேலும் ராணுவத்தினரைக் குவிக்க வேண்டுமா என்பது பற்றி விளக்கிக் கூறுவார்.
தீவிரவாதத்துக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவைக் குறித்து பிற நாடுகளுக்கு விளக்கிக் கூறுவதற்காக பலஅமைச்சர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்தும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் உள்பட பல்வேறு அமைச்சர்கள்,முப்படைத் தளபதிகள், உளவுப் படை அதிகாரிகள் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக நேற்று மாலை நடந்த கூட்டத்தில், இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்களில் உள்ள அலுவலர்களின்எண்ணிக்கையைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இன்டஸ் ஆற்று நீரை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வதில் இந்தியா இதுவரை விட்டுத் தரும் போக்கைகடைபிடித்தது. இனிமேல், சர்வதேச சட்டப்படி இந்தியாவுக்கு வர வேண்டிய நீரை கட்டாயம் வாங்கியே ஆவதுஎன மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஆறுகளில் அணைகள் கட்டுவது போன்ற பணிகளில் இனி இந்தியாவின் அனுமதியை பாகிஸ்தான் பெறவேண்டி வரும். இல்லாவிட்டால் சர்வதேச விதிகளின்படி திட்டங்களுக்கான கடனுதவியை நிறுத்தச் செய்யுமாறுஇந்தியாவால் கோர முடியும்.
இதுகுறித்து நேற்று நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. நாளை மீண்டும் கூடும் இந்தக் கமிட்டியின் கூட்டத்தில்இறுதி முடிவு எடுக்கப்படும்.
பாகிஸ்தானுக்கு எந்தெந்த வகையில் தொல்லை தர முடியுமோ அனைத்து வகையிலும் பிரச்சனை தருவது என்றமுடிவுக்கு இந்தியா வந்துவிட்டது.
பாகிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டுள்ள இந்தியத் தூதர் விஜய் கே. நம்பியாரும் இன்று நடந்தகூட்டத்தில் கலந்து கொண்டார். நாளையும் அவர் இக் கூட்டத்தில் பங்கேற்பார்.
நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு கடந்த 14 நாட்களில் நடக்கும் 5வது பாதுகாப்பு கமிட்டிக் கூட்டம் இதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications