தீவிரவாதிகளை பிடிக்க டெல்லி போலீஸ் புதிய நடவடிக்கை
டெல்லி:
ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார், இந்த அமைப்பின் இந்தியத் தலைவன் காஜிபாபா, இவனது கூட்டாளி தாரிக் அகமத் ஆகியோர் தான் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலைத் திட்டமிட்டுநடத்தியதாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர்.
மசூத் அஸார், காஜி பாபா என்ற அபு ஜிகாதி என்ற சக்லைன் மற்றும் தாரிக் இந்த மூவரும் சேர்ந்து தான் தாக்குதலைநடத்தத் திட்டமிட்டனர் என டெல்லி போலீசின் துணை கமிஷ்னர் அசோக் சந்த் நிருபர்களிடம் கூறினார்.
அவர் கூறுகையில், இவர்கள் தான் இந்தத் திட்டத்துக்கு தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பணம்,ஆயுதங்கள் ஆகியவற்றையும் வழங்கினர்.
இவர்களை டெல்லி போலீஸ் தேடி வருவோர் பட்டியலில் சேர்த்துள்ளது.
காஜி பாகிஸ்தானைச் சேர்ந்தவன். தாரிக் காஷ்மீரைச் சேர்ந்தவன். இவர்களின் புகைப்படங்கள் எங்களிடம்இல்லை. இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகம்மத் அப்ஸல் கொடுத்த தகவலை வைத்துஇவர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன.
காஜி பாபா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவன். 6 அடி உயரமான இவன் மாநிறம் கொண்டவன்.உருது, ஆங்கில, பஞ்சாபி மொழிகள் பேசுவான். தாரிக் என்பவன் அனந்த் நாக் மாவட்டத்தைச் சேர்ந்தவன். 5 அடி10 அங்குல உயரம் கொண்டவன். நல்ல உடற்கட்டு கொண்ட இவன் உருது, காஷ்மீரி மொழிகள் பேசுவான்.
இவ்வாறு அசோக் சந்த் கூறினார்.
1999ம் ஆண்டு விமானக் கடத்தலையடுத்து இந்தியச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மசூத் அஸார்உடனடியாக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பை உருவாக்கினான். அவனுக்கு பாகிஸ்தான் முழு நிதி, ஆயுதஉதவிகளை வழங்கியது. 1993ம் ஆண்டு காஷ்மீரில் ஹர்கத்-உல்-அன்சர் அமைப்பின் செயலாளராக இருந்துகொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட்டபோது அசார் கைது செய்யப்பட்டான். முன்னதாக.
இந்த அமைப்பை ஹர்கத்-உல்-முஜீகிதீன் என்ற பெயரில் நடத்தி வந்தான. அதை அமெரிக்கா தடை செய்தபோதுபெயரை மாற்றிக் கொண்டு தொடர்ந்து பாகிஸ்தான் உதவியுடன் இயங்கி வந்தான்.
இவனை விடுவிக்க இரு முறை வெளிநாட்டினரை பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் கடத்தினர். டெல்லியில்வெளிநாட்டுத் தூதரை கடத்தினார்கள. ஆனால், இந்தியா இவனை விடவில்லை. இறுதியில் பாகிஸ்தானை மிரட்டிஅந்த தூதரை அமெரிக்கா விடுவிக்கச் செய்தது.
பின்னர் 7 வெளிநாட்டினரை அல்-பரான் என்ற ஹர்கத் அமைப்பின் தீவிரவாதிகள் கடத்திச் சென்று வைத்துக்கொண்டு மசூத் அஸாரை விடுவிக்கக் கோரினர். அப்போதும் இந்தியா பணியவில்லை. இதில் ஒரு அமெரிக்கர்தப்பி வந்துவிட்டார். ஒரு நார்வே நாட்டுக்காரரின் தலையில்லா உடல் மட்டும் கிடைத்தது. மற்ற 5 பேரும் என்னஆனார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் கொல்லப்பட்டிருக்காலாம் என நம்ப்படுகிறது.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய விமானம் கடத்தப்பட்டு பயணிகளின் உயிர்கள் ஆபத்தில் சிக்கியபோதுதான் மசூதை இந்தியா விடுவித்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications