ரூ.3.97 கோடி கட்சிக் கடனை அடைத்தார் ஜெ.
சென்னை:
வருமான வரி கட்டுவதற்காக கடந்த 1997ல் கட்சியிடமிருந்து வாங்கிய ரூ.3.97 கோடியையும் திருப்பிக்கட்டிவிட்டார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கடந்த 1997ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு எதிராகப் பல வழக்குகள் போடப்பட்டன. இதையடுத்து அவருடையசொத்துக்கள் அனைத்தும் முடக்கி வைக்கப்பட்டன.
இதனால் தன்னுடைய வருமான வரியைக் கட்டுவதற்காக தன்னுடைய சொந்தக் கட்சியான அதிமுகவிடமிருந்தேஜெயலலிதா 3 கோடியே 97 லட்சத்து 26 ஆயிரத்து 573 ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார்.
இதற்கிடையே ரூ.2.65 கோடி கடனை அவர் ஏழு தவணைகளில் ஏற்கனவே அடைத்து விட்டார்.
கட்சிக்குத் தரவேண்டிய மீதமுள்ள ஒரு கோடியே 32 லட்சத்து 26 ஆயிரத்து 573 ரூபாய் கடனையும் இன்று(வியாழக்கிழமை) அவர் அடைத்து விட்டார்.
இதற்கான செக்கை அதிமுக பொருளாளரும் எம்.பியுமான ஸ்ரீநிவாசனிடம் ஜெயலலிதா இன்று காலைகொடுத்தார்.
அதிமுக இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமான வரிகட்டுவதற்காக வாங்கிய கடன் முழுவதையும் ஜெயலலிதா அடைத்துவிட்டார்.
டான்சி மற்றும் கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் ஆகிய வழக்குகளில் கடந்த 4ம் தேதியும் நிலக்கரி ஊழல்வழக்கில் இன்றும் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications