சசிகலாவுடன் நீதிமன்றத்துக்கு வந்த ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டபோது முன்னாள் முதல்வர்ஜெயலலிதா தனி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த 16 நாட்களாக ஹைதராபாத் சென்றிருந்த ஜெயலலிதா, நேற்று சென்னை திரும்பினார்.

நிலக்கரி ஊழல் வழக்கின் தீர்ப்பு நாளான இன்று ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே நீதிபதிதார்வேஸ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று காலை சுமார் 10.20 மணிக்கு தனி நீதிமன்றத்திற்கு ஜெயலலிதா வந்தார். அவருடைய நெருங்கியதோழியான சசிகலாவும் அவருடன் கூடவே வந்தார்.

ஆனால் தமிழக அமைச்சர்கள், தொண்டர்கள், ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் எல்லாம் அவர் வருவதற்குமுன்பே நீதிமன்றத்திற்கு வந்து விட்டனர். ஜெயலலிதாவின் வருகைக்காக அவர்கள் நீதிமன்ற வாசலிலேயேகாத்திருந்தனர்.

ஜெயலலிதா நீதிமன்றத்தில் வந்து இறங்கியதும், அவருடைய பாதுகாப்பு அதிகாரிகளும் கமாண்டோக்களும்அவரைச் சூழ்ந்து கொண்டனர். பின்னர் பாதுகாப்புடன் அவர் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார்.

தீர்ப்பு வழங்கப்பட்டதும் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த ஜெயலலிதா, தன்னைப் பழி தீர்ப்பதற்காகவேகருணாநிதி இந்த வழக்கைத் தொடர்ந்தார். ஆனால் நான் அப்பாவி என்பது மறுபடியும் நிரூபிக்கப்பட்டு விட்டதுஎன்று கூறிவிட்டு விரைந்து காரிலேறி சென்றுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+