ராஜ்யசபாவுக்கு அதிமுக போட்டி: த.மா.கா. கூட்டணி முறிகிறது
சென்னை:
மூப்பனார் மறைவினால் ராஜ்யசபாவில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப நடைபெறவுள்ள தேர்தலில், அதிமுகசார்பில் டாக்டர் மைத்ரேயன் போட்டியிடுவார் என்று ஜெயலலிதா கூறியுள்ளதால், த.மா.கா-அதிமுக கூட்டணிமுறியும் எனத் தெரிகிறது.
ராஜ்யசபா எம்.பி. தேர்தல் ஜனவரி 17ம் தேதி நடக்கிறது.
மூப்பனார் மறைவால் ஏற்பட்ட இந்த காலி இடத்துக்கு த.மா.கா. போட்டியிடும் என அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதற்கு அதிமுகவின் ஆதரவும் கோரப்படும் என்றார்.
நற்று (புதன்கிழமை) அதிமுகவுடன தங்கள் உறவு நீடிப்பதாகவும், தமாகா ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
அதிமுக திடீர் அறிவிப்பு:
இந்நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சியின் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் வி. மைத்ரேயன் போட்டியிடுவார்என இன்று (வியாழக்கிழமை) ஜெயலலிதா திடீரென அறிவித்தார்.
இதனால் த.மா.காவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து வாசனிடம் அதிமுக தரப்பில் ஆலோசனைநடத்தப்படவில்லை என த.மா.காவினர் கூறினர். அதிமுக உறவை முறித்துக் கொள்ள வேண்டும் எனக்கோரியுள்ளனர்.
இதனால் அதிமுகவுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆனால் வாசன் சுற்றுப்பயணத்தில் இருப்பதால்அவரது கருத்தை அறிய முடியவில்லை.
சமீபகாலமாக அதிமுக-த.மா.கா. உறவு தொடர்ந்து சிக்கல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. தமிழக அரசு ஊழியர்கள்போராட்டத்தில் அரசுக்கு எதிராக த.மா.கா. செயல்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்குக்கு த.மா.காஆதரவு தெரிவித்தது.
ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுடன் வாசன் நெருக்கமாகஇருந்து வருவதும் அதிமுகவை எரிச்சல்படுத்தி வருகிறது.
பா.ஜ.கவிலிருந்து வந்த மைத்ரேயன்:
அதிமுக தரப்பில் போட்டியிடும் மைத்ரேயன் முன்பு பாஜகவில் இருந்தவர். பாஜகவுடன் திமுக கூட்டணிஅமைத்ததால் அக்கட்சியிலில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்தார்.
இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் லஷ்மணனுக்கு எதிராக மயிலாப்பூரில் போட்டியிட்டுதோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications