முஷாரப் விமானம் இந்திய வானில் பறக்க அனுமதி
டெல்லி:
சார்க் மாநாட்டுக்காக நேபாளம் செல்லவிருக்கும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் விமானம் இந்தியவான் பகுதியில் பறக்க அனுமதிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தானிலிருந்து நேபாளம் செல்லும் விமானம் இந்திய வான்பகுதியில் பறக்காமல் செல்ல முடியாது.
இதையடுத்து வரும் ஜனவரி 4ம் தேதி காட்மாண்டு நகரில் தொடங்கும் சார்க் மாநாட்டில் முஷாரப் கலந்து கொள்ளமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் சார்க் மாநாடும் ஒத்திவைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் காட்மாண்டு செல்லும் முஷாரப்பின் விமானம் மட்டும் இந்திய வான்பகுதியில் பறக்கஅனுமதிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
ஆனாலும் முஷாரப் கேட்டுக் கொண்டால்தான் இந்த அனுமதி வழங்கப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகசெய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் கூறியுள்ளார்.
இந்திய-பாகிஸ்தானுக்கு இடையே உள்ள பிரச்சனையால் சார்க் மாநாடு பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
சார்க் அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டால்தான் மாநாடுநடைபெறும் என்பது அவ்வமைப்பின் விதிமுறைகளில் ஒன்று.
வேறு வழியில் பயணம் செய்ய முஷாரப் முடிவு:
இந்நிலையில் வேறு வழியில் காட்மாண்டு செல்வதற்கு முஷாரப் முடிவு செய்து விட்டார்.
சார்க் மாநாட்டில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்ற நிலையில் எப்படியும் காட்மாண்டு போயேஆகவேண்டும் என்பதால் இந்திய வான்பகுதியில் பறக்காமலேயே செல்ல முஷாரப் முடிவெடுத்துள்ளதாகபாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அசிஸ் அகமது கான் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications