மேம்பால ஊழல்: அடையாறு பாலத்தில் சி.பி.சி.ஐ.டி. சோதனை
சென்னை:
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார்இன்று (வெள்ளிக்கிழமை) காலை அடையாறு பாலத்தைச் சோதனையிட்டனர்.
கடந்த திமுக ஆட்சியில் மாநகராட்சியால் மேம்பாலங்கள் கட்டப்பட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாகசி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் அடையாறு பாலத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று ஆராய்ந்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி.அதிகாரி முகமது அலி கூறுகையில்,
பாலங்கள் கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்களில் முறைகேடு நடந்துள்ளதா என்று இந்த பாலத்தில் ஆராய்ந்துவருகிறோம். இந்த பாலம் கட்டப் பயன்படுத்த கற்கள், இரும்புகள் தரமானதா என்று ஆராய்ந்து வருகின்றோம்.
மேலும் இந்த பாலம் இந்த போக்குவரத்தை தாங்கும் அளவில் கட்டப்பட்டுள்ளதா என்றும் விசாரித்துவருகின்றோம்.
இது வரை கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட 8 பாலங்களை பற்றி விசாரித்து விட்டோம். மேலும் பாலம் கட்டுவதில்சம்பந்தப்பட்ட 75 சாட்சிகளுக்கு மேல் விசாரணை செய்து முடித்து விட்டோம்.
விசாரணை முழுவதும் முடிந்த பிறகு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் என்று முகமதுஅலி கூறினார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications