பதவிக்காகவே சிலர் காங்கிரசில் உள்ளனர்: இளங்கோவன்
காஞ்சிபுரம்:
காங்கிரஸில் சேவை செய்வதற்கென்றே சிலர் இருக்கும் வேளையில் பதவியை அனுபவிப்பதற்கென்றே இன்னும்சிலர் உள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் செங்கல்பட்டில் நேற்று (வியாழக்கிழமை) நடந்தது. இந்தகூட்டத்தில் இளங்கோவன் கூறியதாவது:
நாம் 35 ஆண்டுகள் பதவி இல்லாமல் இருந்து விட்டோம். காங்கிரஸில் சேவை செய்வதற்கென்றே சிலர்இருக்கின்றனர். பதவியை அனுபவிப்பதற்கென்றே சிலர் இருக்கின்றனர்.
இப்போது உள்ள மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலவாழ்வுக்காக எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.கடந்த 7 மாத அதிமுக ஆட்சியில் என்னென்ன வேதனைகள் என்பதை கொஞ்சம் எண்ணி பாருங்கள். அரசுவிதித்துள்ள வரிச்சுமையை மக்கள் எப்படி தாங்குவார்கள்.
இது நியாயமா என்று கேட்டால், மக்கள் மகிழ்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறிவிட்டு , தோழியுடன்ஹைதராபாத் திராட்சை தோட்டத்திற்கு சென்று விட்டார். தமிழகத்தில் மக்கள் குமுறிக் கொண்டு இருக்கின்றனர்.
மக்களை எப்படி ஏமாற்றுவது என்பதில் தான் இந்த அரசு கவனத்தை செலுத்தி கொண்டிருக்கிறது. 96 தேர்தலில்மக்கள் புகட்டிய பாடம் ஜெயலலிதாவுக்கு நினைவில் இருக்கும், அதனால் சிறிது அடக்கி வாசிப்பார் என்றுபார்த்தோம். ஆனால் திருந்தாதவர்களை என்ன செய்ய முடியும்.
கருணாநிதியை கைது செய்த போது, சோனியா காந்தி மட்டும் தலையை அசைத்திருந்தால் இன்று ஆட்சியில்இருப்பவர்கள் எல்லாம் கம்பிகளுக்கு பின்னால் இருந்திருப்பார்கள்.
தமிழகத்துக்கு சட்டசபைத் தேர்தல் வரும் வாய்ப்பு உள்ளது. அப்போது காங்கிரஸ் தனித்து போட்டியிடும்.காங்கிரஸ் இனி சுயமரியாதையை விட்டுக் கொடுக்காது என்று அவர் கூறியுள்ளார்.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications