ராஜீவ் கொலை வழக்கு: விடுதலை கோரும் ஆயுள் தண்டனை கைதி
சென்னை:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தன்னைவிடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலைசெய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில் நளினி மற்றும் அவருடைய கணவர் முருகன் உள்பட 4 பேருக்கு மரண தண்டனைவழங்கப்பட்டது.
பின்னர் நளினியின் கருணை மனுவைப் பரிசீலித்த தமிழக ஆளுநர் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் தமிழக முதல்வருக்கு நளினி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
ஒரு பெண் கைதியாக கடந்த 10 ஆண்டுகளாக நான் ஜெயில் தண்டனையை அனுபவித்து வருகிறேன். நல்ல கைதிஎன்று பெயர் எடுத்துள்ளதால் என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
தமிழக உள்துறை செயலாளருக்கும் இக்கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து நளினியின் வழக்கறிஞர் துரைசாமி கூறுகையில்,
குற்றவியல் தண்டனைச் சட்டம் 432, 433 ஆகிய பிரிவிகளின் கீழ் ஒரு குற்றவாளியின் தண்டனையை சஸ்பெண்ட்செய்யவோ குறைக்கவோ மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு.
நளினி கடந்த 10 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வருவதால் அவர் தன்னை விடுதலை செய்யும்படிகோருவதற்குத் தகுதியுடையவர்.
ஆனால் நளினியின் கடிதம் குறித்து தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் துரைசாமி.
இவ்வழக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐயால் நடத்தப்பட்டது. எனவே மத்திய அரசுடன் கலந்துபேசிய பிறகுதான் தமிழக அரசு நளினியின் விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் என்று தெரிகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications