மழையால் நிலச்சரிவு: தமிழகத்திலிருந்து ஊட்டி துண்டிப்பு
ஊட்டி:
பலத்த மழை காரணமாக ஊட்டி மலைப் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திலிருந்துஊட்டி நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதையடுத்துமேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்குச் செல்லும் ரயில் பாதைகளில் ஆங்காங்கே நிலச்சரிவு காரணமாகதண்டவாளங்கள் மூடப்பட்டன.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக, சாலைப் பகுதிகளிலும் நிலச்சரிவுகாரணமாக பாறைகளும் மணற்குவியலும் வந்து நிரம்பியுள்ளன.
இதையடுத்து மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலைப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால்ஊட்டிக்குச் செல்ல வேண்டிய பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்ற லாரிகள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
ஆனால் இப்பாதை மிகவும் குறுகலாக இருப்பதால் வாகனங்கள் மிக மெதுவாகவே சென்று கொண்டிருக்கின்றன.நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஊட்டிக்குச் செல்ல முடியாமல் மேட்டுப்பாளையத்திலேயே கடந்த 2 நாட்களாகநின்று கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே ஹில்குரோவ்-கல்லாருக்கிடையே மலைப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள பாலமும் நிலச்சரிவினால்உடைந்துள்ளதால், இப்பகுதியில் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
இப்பாலத்தைச் சீர்செய்வதற்கு இன்னும் பல நாட்கள் ஆகும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதையடுத்து ஊட்டிக்குப் பயணம் செல்லும் ஆவலோடு வந்த சுற்றுலாப் பயணிகள் கடுமையான ஏமாற்றம்அடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications