லஷ்கர், ஜெய்ஷ் அமைப்புகள் மீது நடவடிக்கை இல்லை: பாக்.
இஸ்லாமாபாத்:
லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகிய தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று பாகிஸ்தான் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.
இந்த அமைப்புகளைத் தீவிரவாத அமைப்புகள்தான் என்று அமெரிக்கா அறிவித்துவிட்ட போதிலும், பாகிஸ்தான்அதை ஏற்க மறுத்து விட்டது.
அமெரிக்கா விதித்துள்ள தடை அந்த நாட்டுக்குள் மட்டும்தானே தவிர, பாகிஸ்தானுக்குள் அல்ல என்றும் கான்கூறினார்.
இந்தியாவாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி. போதுமான ஆதாரங்களை எங்களிடம்கொடுத்தால்தான் நாங்கள் அந்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
எங்கள் நாட்டில் உள்ள அமைப்புகளை நாங்கள் தீவிரமாகவே கண்காணித்து வருகிறோம். எந்த அமைப்பும்தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவில்லை என்று எங்களால் உறுதியாகக் கூற முடியும் என்று கூறினார் கான்.
இந்த அமைப்புகள்தான் நாடாளுமன்றத் தாக்குதலுக்குக் காரணம் என்று இந்தியா புகார் கூறியுள்ளதே என்றுகானிடம் கேட்டதற்கு, இந்த வெற்றுக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் எங்களுக்குப் போதாது. ஆரம்பத்திலிருந்தேநாங்கள் போதுமான ஆதாரத்தைக் கொடுங்கள் என்றுதான் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்றுபதிலளித்தார்.
ஆனால் ஜெய்ஷ் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது பற்றிக் கேட்டபோது, அதற்கும் இந்தியாவின்குற்றச்சாட்டுகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறினார் கான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications