சென்னையில் கள்ள நோட்டு கும்பல் கைது
சென்னை:
சென்னை மாம்பலத்தில் உள்ள நகைக் கடையில் கள்ள நோட்டுகளை கொடுத்து நகை வாங்க முயன்ற ஒருவர்பிடிபட்டார். அவரது கும்பலையும் கைது செய்து, ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை மாம்பலத்தில் கள்ள நோட்டுகளை கொடுத்து நகைக்கடையில் நகை வாங்க ஒரு கும்பல் வந்துள்ளதாகபோலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்பில்ஈடுபட்டனர்.
சம்பவத்தன்று பகலில் தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் சுமார் ரூ.51,000 மதிப்புள்ள நகைகளை எடுத்துக்கொண்டு அதற்கு கள்ள நோட்டுகளை கொடுத்த நங்கநல்லூரை சேர்ந்த நாகராஜன் (40) என்பவரை போலீசார்கைது செய்து விசாரித்தனர்.
அவன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த இஸ்மாயில் (32), மவுண்ட்ரோடு ரகுமான்(58) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கள்ள நோட்டுகளைபோலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கும்பல் பல இடங்களில் குற்றங்கள் செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவர்களின் கூட்டாளிகள்கேரளாவிலும், மும்பையிலும் உள்ளதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications